12 வயது சிறுவன் மூலம் குழந்தை பெற்ற ஆஸ்திரேலிய பெண்: 6 ஆண்டு சிறை தண்டனை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மகளின் சக வகுப்புத் தோழனை மயக்கி, பாலுறவு வைத்துக்கொண்டு அவன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
36 வயதாகும் அந்தப் பெண், தனது மகளை காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, மகளின் சகவகுப்பு மாணவன் என்ற முறையில் மேற்படி சிறுவனையும் அவ்வப்போது ஏற்றிச் செல்வது வழக்கம்.
கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பழக்கத்தை அந்த சிறுவன் பன்னிரெண்டு வயதை அடைந்தபோது அந்த சிறுவனை தனது ஆசைக்கான வடிகாலாக அந்தப் பெண் மாற்றி அமைத்துக் கொண்டார்.

பெண் குழந்தைக்குத் தாய்
மகளின் தோழன் என்றும் பார்க்காமல் அந்த சிறுவனுடன் பல சந்தர்ப்பங்களில் தகாத உறவை வைத்துக்கொண்ட அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். கடந்த மே மாதம் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார் அந்த பெண்மணி.
தந்தையான சிறுவன்
தற்போது அந்த சிறுவனுக்கு 14 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயது பெண்மணிக்கு 14 வயது சிறுவன் மூலம் குழந்தை பிறந்துள்ளது அறிந்து சிறுவனின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசில் புகார்
தங்கள் மகனின் குழந்தைப் பருவத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அந்தப் பெண் சீர்குலைத்து விட்டதாக போலீசில் புகார் அளித்ததுடன் விக்டோரியா கவுன்ட்டி நீதிமன்றத்தில் அந்தப் பெண் மீது வழக்கும் தொடர்ந்தனர்.
6 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஜேன் பாட்ரிக், ‘தனது மகன் போல் பாவித்து அவன் மீது அக்கறை செலுத்துவதை விடுத்து, தன்னுடைய உடல் சுகத்துக்காக தகாத முறையில் அந்தப் பச்சிளம் சிறுவனை பயன்படுத்திக் கொண்டு, இத்தனை சிறிய வயதில் அவனை தந்தையாக்கி, அவனுக்கு தேவையற்ற மன உளைச்சலை அளித்ததற்காக குற்றவாளிக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கிறேன்' என்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications