3600 வைரக்கற்கள்... விலை ரூ. 11 கோடி... .உலகிலேயே இந்த மாஸ்க்தான் அதிக விலை!!
ஜெருசலம்: உலகிலேயே அதிக விலை கொண்ட ரூ. 11 கோடி மதிப்பிலான மாஸ்க் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாஸ்க்கில் 3,600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்படுகிறது. மாஸ்க் 18 காரட் தங்கத்தினால் செய்யப்பட்டு, எண் 99 பில்டரால் உருவாக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக அளவில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து வருகின்றனர். இவற்றையும் தங்களது வசதிக்கேற்ப தங்கத்தில், வைரத்தில் செய்து அணிந்து வருகின்றனர். இஸ்ரேலில் ரூ. 11 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் வைர மாஸ்க்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட மாஸ்க் என்று தெரிய வந்துள்ளது.

சீனாவில் ஷாங்காய் நகரைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவர் உலகிலேயே அதிக விலையிலான மாஸ்க் அணிய வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதற்காக இஸ்ரேலில் ஆட்டரும் கொடுத்துள்ளார். அந்த மாஸ்க் 18 காரட்டினால் தயாரிக்கப்படுகிறது. இதில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்படுகிறது. இதில் எண் 99 பில்டர் அமைக்கப்படும். இந்த மாஸ்கை ஓர்னா அண்ட் இசாக் லெவி என்ற நகைக்கடையினர் செய்து வருகின்றனர். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லெவி பதிவிட்டு இருக்கும் தகவலில், ''பணம் எல்லாத்தையும் கொடுத்துவிடாது. இதுபோன்று வித்தியாசமாக மாஸ்க் அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். அது அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த மாஸ்க் 270 கிராம் எடை கொண்டது. சாதாரண துணியினால் ஆன மாஸ்கை அணிந்து செல்லவே கஷ்டப்படுகையில் இதுபோன்ற கடினமான மாஸ்க்குகளை எப்படி அணிவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு இழந்து வரும் நிலையில் தங்களது பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இது சிறந்த தருணம் என்று லெவி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்தியாவிலும், சண்டிகர், சூரத், கோவை போன்ற இடங்களிலும் தங்க, வைர மாஸ்க்குகளை அணிந்து வருவது குறித்த செய்தி வெளியாகி இருந்தது. கோவையில் கடந்த மாதம் ஒரு நகைக் கடைக்காரர் ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் ரூ. 15,000 மதிப்பிலான வெள்ளி மாஸ்க்குகளை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications