For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் “ஓயசிஸ் ஆப் தி சீஸ்” – உலகின் மெகா சைஸ் சொகுசுக்கப்பல்!

Google Oneindia Tamil News

லண்டன்: பிரான்ஸைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான ஓயசிஸ் ஆப் தி சீஸ் முதன்முறையாக லண்டனின் சவுதாம்டன் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.

பார்க்கவே ஒரு குட்டி நகரம் போல இந்த கப்பல் பிரமாண்டமாக காட்சி தருகிறது.

{ventuno}

கப்பலை 9 பகுதிகளாக நிர்மானித்து பொறியியல் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். உலகிலேயே, ஒரே சமயத்தில், 6,000 பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் என்ற பெருமையும் இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உண்டு.

இந்தக் கப்பல் 2.25 லட்சம் டன் எடை கொண்டது. 1,187 அடி நீளமும், 208 அடி அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் மட்டத்திலிருந்து 236 அடி உயரம் கொண்டது. 16 அடுக்குகள் கொண்டதாக அடுக்குமாடி மாளிகையாக காட்சியளிக்கிறது.

English summary
The world’s largest cruise ship, Oasis of the Seas, is making its first ever call into a UK port in Southampton today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X