உங்களை போல் மாறணும்.. நீங்கள் தான் பெஸ்ட்.. மோடியை பார்த்து இத்தாலி பெண் பிரதமர் சொன்ன வார்த்தை!
ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்தார். இருவரும் கைக்குலுக்கி ஜாலியாக உரையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அப்போது மோடியை பார்த்த ஜார்ஜியா மெலோனி, "நீங்கள்தான் பெஸ்ட்.. உங்களை போல் நானும் மாற முயற்சி செய்கிறேன்'' என்று கூறினார்.
ஜி 7 கூட்டமைப்பில் மொத்தம் 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இதில் இந்தியா இல்லை. ஜி7 கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி தொடங்கிய உச்சி மாநாடு நேற்று வரை கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடந்தது.
ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதுதவிர உறுப்பினர்களாக இல்லாத நாட்டின் தலைவர்களும் கனடாவின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நேற்றைய கடைசி நாள் மாநாட்டின்போது பிரதமர் மோடி ஒவ்வொரு தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார்.
அப்போது பிரதமர் மோடியை, இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்தார். பிரதமர் மோடியும், ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள். மேலும் இவர்கள் 2 பேரும் சந்தித்து பேசும் வீடியோ எப்போதும் இணையதளங்களில் அதிக கவனம் பெறும். மேலும் மெலோனி பெயர் மற்றும் மோடி பெயர் ஆகியவற்றை இணைத்து Melodi எனும் ஹேஷ்டேக் இணையதளங்களில் ட்ரெண்ட்டாகும்.
அந்த வகையில் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் பிரதமர் மோடியை பார்த்த ஜார்ஜியா மெலோனி அவருடன் கைக்குலுக்குகிறார். அதன்பிறகு மோடியை பார்த்து "நீங்கள்தான் பெஸ்ட்' என்றும், "உங்களை போல் நானும் ஆக முயற்சி செய்கிறேன்" என்றும் கூறினார். அதனை கேட்டு பிரதமர் மோடியும், ஜார்ஜியா மெலோனியும் சேர்ந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் பிரதமர் மோடியுடன் கைக்குலுக்கும் போட்டோவை ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில்,‛‛இத்தாலி - இந்தியா ஆகியவற்றின் இடையே நல்ல நட்பு இருக்கிறது'' என்று தெரிவித்து இருந்தார். அதற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தின் மூலமாக பதிலளித்தார். அதில், "இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து வலுப்பெற்று, நமது மக்களுக்கு பெரும் பயனளிக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications