“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ்
தெஹ்ரான்: நேற்று தங்கள் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியிருந்தது. விமானத்தை ஓட்டி வந்த விமானியை காணவில்லை என்று அவரது தாய் கூறியிருந்த நிலையில், "உங்கள் மகன் டிரம்ப் உடன் இருப்பதை விட, எங்களுடன் இருப்பது அவருக்கு பாதுகாப்பானது" என்று ஈரான் விமானியின் தாய்க்கு மெசேஜ் கொடுத்திருக்கிறது.
நேற்று அமெரிக்காவின் இரண்டு விமானங்களை ஈரான் வீழத்தியிருந்தது. அதில் ஒரு விமானம் முற்றிலும் சேதமடைந்திருப்பதால், விமானி உயிருடன் தப்பித்திருக்க வாய்ப்பு இல்லை. மற்றொரு விமானத்தில் 2 விமானிகளும் தப்பியிருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவரை மட்டுமே அமெரிக்கா காப்பாற்றியிருக்கிறது. மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமானியின் தாயார் ஒருவர், தனது மகனை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை என்றும், அவரது கதி என்னவென்று தெரியாமல் தவிப்பதாகவும் x தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கையில், இதற்கு ஈரான் பதிலளித்திருக்கிறது.
"உங்கள் மகன் டொனால்ட் டிரம்ப் கையில் இருப்பதை விட, ஈரான் வசம் கைதிகளாக இருப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பு. அமெரிக்க மீட்புக் குழுவினரிடம் சிக்காமல், அவர்கள் ஈரானிடம் பிடிபட வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். கைதிகளை கண்ணியத்துடன் நடத்த எங்களுக்குத் தெரியும்" என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
அதேபோல, "மனிதநேய சட்டங்கள் எழுதப்படுவதற்கு முன்பே கைதிகளின் உரிமைகளை வரையறுத்த நாகரிகம் எங்களுடையது. அமெரிக்காவைப் போல நாங்கள் கற்காலத்தில் வாழவில்லை" என்று தென்னாப்பிரிக்காவுக்கான ஈரான் தூதரகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
ஈரான் போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை போரில் மொத்தம் 1900க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதில், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 13 பேர். இஸ்ரேலை சேர்ந்தவர்கள் 19 பேர். மீதமுள்ளவர்கள் அனைவரும் ஈரானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா?












Click it and Unblock the Notifications