அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி
வாஷிங்டன்: ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மேரிவெக்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்தது. நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில் இந்திய சிப்பந்திகள் 24 பேர் தவித்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இந்திய சிப்பந்திகள் இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போரால் மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஈரானிடம் முன் அனுமதியின்றி சென்றால் கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் அங்கு கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் தவித்த 24 இந்தியர்கள்
மற்றொரு பக்கம் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா கடல் படையும் முற்றுகையிட்டுள்ளது. இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. இந்த சூழலில்தான், ஓமன் கடல்பகுதியில் சுமார் 15 கடல் மைல் தொலைவில் பலாவ் நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கப்பலில் தீ பிடித்து எரிந்தது. இந்தக் கப்பலில் 24 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர்.
கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதுடன், கப்பல் மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால், நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த சிப்பந்திகள் அவசர உதவி கோரி எஸ்ஓஎஸ் (SOS) சிக்னலை அனுப்பியுள்ளனர். 'மாரிவெக்ஸ்' (Marivex) என்ற சரக்கு கப்பலில் இருந்து வந்த எஸ்.ஓ.எஸ் அழைப்பை ஏற்று ஓமன் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டுள்ளனர்.
24 பேரும் பத்திரமாக மீட்பு
இதற்கிடையில், ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த மஸ்கட்டிலுள்ள இந்திய தூதரகம், MT Marivex கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்து அவசர உதவி கோரும் தகவல் கிடைத்தவுடன், ஓமன் கடல்சார் மீட்புக் குழுக்கள் விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த உதவிக்காக ஓமன் அரசுக்கு இந்திய அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பல் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக சிப்பந்திகள் ஆரம்பத்தில் சந்தேகித்துள்ளனர். எனினும், கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளின் முதற்கட்ட மதிப்பீடுகள், இது டிரோன் தாக்குதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் அரிஹண்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். அமெரிக்க கடற்படை இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்று சந்தேகம் நிலவியது. ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக கூறி இந்த கப்பலுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிறிது நேரத்தில் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு அமைப்பான செண்ட்காம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலை உறுதி செய்தது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
"ஈரானுக்கு எதிராக அமலில் உள்ள தடையை மீறி, காலியாகச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று ஈரான் துறைமுகத்தை நோக்கி பயணிக்க முயன்றதால், ஜூன் 8-ஆம் தேதி ஓமன் வளைகுடாவில் அமெரிக்க படைகள் அந்தக் கப்பலை செயலிழக்கச் செய்தன. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லின்கால்ன் (சிவிஎன் 72) விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட எ F/A-18 சூப்பர் ஹார்னெட் என்ற போர் விமானம், கப்பலின் இயந்திர மற்றும் வழிநடத்தல் பகுதிகளை குறிவைத்து துல்லியமான ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக மேரிவெக்ஸ் கப்பல் இனி ஈரானை நோக்கி பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்திய சிப்பந்திகள் இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்














Click it and Unblock the Notifications