கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கு.. முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

kallakurichi-poison-liquor-death-case-two-main-accused-granted-bail

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+