காஞ்சிபுரத்தில் ரூ.50000 மாமூல் கேட்டு வளையல் கடை பெண் மீது தாக்குதல்: அதிமுக பெண் நிர்வாகி கைது

காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு வளையல் கடை வைத்திருக்கும் பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: வளையல் கடை வியாபாரம் செய்து வரும் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் அதிமுக பெண் நிர்வாகி ரகளை செய்து தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Recommended Video

    காஞ்சிபுரத்தில் ரூ.50000 மாமூல் கேட்டு வளையல் கடை பெண் மீது தாக்குதல்: அதிமுக பெண் நிர்வாகி கைது

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சித்ரா. இவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில், சிறிய அளவில் வளையல் கடை நடத்தி வருகிறார். கணவனால் கைவிடப்பட்டு கை குழந்தை வைத்துள்ளார். இவர் தனியாக வசித்து வருகிறார்.

    மாமூல் கேட்டு ரகளை செய்த பெண்ணின் பெயர் திலகவதி. இவர் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலளராக இருக்கிறார். அதே பகுதியில் வசித்து வருகிறார்.

    ரூ. 50000 மாமூல் கேட்ட பெண் நிர்வாகி

    ரூ. 50000 மாமூல் கேட்ட பெண் நிர்வாகி

    வளையல் கடை நடத்த வேண்டும் என்றால் குறிப்பிட்ட பணத்தை தனக்கு தர வேண்டும் என சித்ராவிடம் கேட்டு அடாவடி செய்துள்ளார் திலகவதி. இந்தப் பகுதியில் வளையல் கடை நடத்த வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமூலாக தரவேண்டும் எனவும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தரவில்லை என்றால் கடையை அகற்றுமாறு திலகவதி எச்சரித்துள்ளார்.

    சித்ராவை தாக்கிய பெண்

    சித்ராவை தாக்கிய பெண்

    பல முறை மாமூல் கேட்டு திலகவதி தொந்தரவு செய்யவே தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சித்ரா கூறியுள்ளார். பணம் கொடுக்காததால் கோபமடைந்த திலகவதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது சித்ராவை தாக்கியுள்ளார். சித்ராவின் முடியைப் பிடித்து இழுத்து தாக்கினார் திலகவதி.

    காவல் நிலையத்தில் புகார்

    காவல் நிலையத்தில் புகார்

    காயமடைந்த சித்ரா காவல் நிலையத்தில் திலகவதி மீது புகார் அளித்தார். சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி திலகவதியை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    திலகவதி சித்ராவை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் திலகவதியை சித்ரா தாக்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. மாமூல் கேட்டு கொடுக்காததால் வளையல் கடை பெண்ணை தாக்கியது தொடர்பாக காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகி கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+