கெளம்புங்க..கெளம்புங்க..நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கு மக்களே! முதன்மை கல்வி அலுவலர் திடீர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : மழைக்காலத்தின் போது தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் அதனை ஈடு செய்யும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியது.

வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் பின்னர் புயலாக மாறியது. பின்னர் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

 மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளி செல்லும் காலமானது குறைந்திருந்தது. இதனால் அதனை ஈடு செய்யும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி மற்றும் பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செயல்படும் பள்ளிகள்

செயல்படும் பள்ளிகள்

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை அதாவது சனிக்கிழமை செயல்படும் எனவும் புதன்கிழமை பாட வேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி செயல்படுவது உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+