டிடிஎப் வாசன் அவரா விழுந்து கிடந்தார்.. யாரும் சாகலை.. ஜாமீன் கேட்ட வக்கீல்! நீதிபதி சொன்ன வார்த்தை
காஞ்சிபுரம்: வீலிங் செய்து விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டிடிஎப் வாசன்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் டிராவல் செய்தும், சாகசம் செய்தும் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை ஏராளமான இளைஞர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு சிறுவர்களும் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

டிடிஎப் வாசன் தொடர்ந்து சாகச வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பாக தமிழ்நாட்டில் பல போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை போலீசில் சிக்கினாலும் ஜாமினில் வெளிவந்து மறுபடியும் சாகச பயணங்கள் செய்து இணைய தளத்தில் பதிவிடுகிறார்.
டிடிஎப் வாசன் தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‛வீலிங்' செய்து விபத்தில் சிக்கினார் டிடிஎப் வாசன். நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
டிடிஎப் வாசன் சிக்கிய விபத்தில் உயிர் சேதம்ஏற்படவில்லை. யாருக்கு எந்த சேதமும் இல்லை. அவரே வாகனத்தை ஓட்டி சென்று விழுந்து இருக்கிறார். இத்தகைய சூழலில் அவர் மீது வலிமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது. ஆனால் போலீசார் அதனை செய்துள்ளனர். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்ற நீதிபதி ‛‛தொடர்ந்து அவர் அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுகிறார். பலமுறை வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஆபத்தான முறையில் பைக் ஓட்டியுள்ளார்'' எனக்கூறி ஜாமின் தர மறுத்து விட்டார்.
விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் உடல் வலி, இடுப்புவலி இருப்பதாக கூறியதை அடுத்து டிடிஎப் வாசனுக்கு நேற்றைய தினம் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி டிடிஎப் வாசனுக்கு ஜாமின் தர மறுத்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து டிடிஎப் வாசன் மீண்டும் புழல் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications