பாஜகவில் மாவட்ட அளவில் பொறுப்பு வழங்கப்பட்ட.. முன்னாள் ரவுடி படப்பை குணா கைது
சென்னை: படப்பை குணாவை சுங்குவார்சத்திரம் அருகே மதுரைமங்கலத்தில் தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது.

குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது. படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் படப்பை குணாவும் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பும் வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். படப்பை குணாவுக்கு பாஜகவில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது பிரபல முன்னாள் ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. படப்பை குணாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications