"ஹிண்டன்பர்க் அறிக்கை.." அதானி குற்றவாளி என்றால் உதவிய மோடி யார்? ஆ.ராசா ஆவேசம்!
அதானியின் வளர்ச்சிக்கு உடந்தையாக இருந்த பாஜகவும் ஃபிராடு என்று ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம்: பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் என்று திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானியின் ஃபிராடுகள் பற்றி விவரமாக கூறியுள்ளதாக பேசிய ஆ.ராசா, அதானியின் வளர்ச்சிக்கு உடந்தையாக இருந்த பாஜகவும் குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் நகர திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக துணைச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசுகையில், இந்தியாவில் இந்து என்றால் பிராமணர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை பகடை காயாக மாற்றுகிறார்கள். இதனை வைத்து இந்து தேசம் என்கிறார்கள்.

ஆ.ராசா பேச்சு
கலைஞர் பேனா நினைவு சின்னம் கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த பேனா தான் கை ரிக்ஷாவை ஒழித்தது. அந்த பேனா தான் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க கையெழுத்திட்ட பேனா, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்த பேனா என்று ஏராளமானவற்றை எழுதலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கு என்ன எழுதுவார்கள். ஜெயலலிதா உயிரிழந்ததால், சிறை தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சொன்னது என்ன?
அதன் காரணமாக தான் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் அதிமுகவினர் சசிகலா தான் தவறு செய்தார், ஜெயலலிதா தவறு செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அந்த தீர்ப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் எதிரியான ஜெயலலிதா செய்தது அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளையர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேனா நினைவு சின்னம் அமைத்தால், இது சங்கத் தமிழ் பேனா என்று ஏராளமான வாக்கியங்களை எழுதுவோம்.

ஜெயலலிதா நினைவிடம்
ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் தைரியம் இருந்தால், தீர்ப்பில் கூறிய வாக்கியங்களை எழுதுங்கள். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, கொள்ளைக்காரி என்று கூறிய பின்னரும், ஜெயலலிதா பெரும் பொருட்செலவில் நினைவிடம் கட்டியுள்ளார்கள். எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மத்திய அரசை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஒரு நாள் இந்தியாவில் இல்லை. பாஜக ஆட்சியில் அதானி உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்களையும் அதானி வாங்கினார்.

அதானி விவகாரம்
இந்த நிலையில் தான் அதானியின் வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்று ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ஸ்டாக் மானிபுலேசன் ( stock Manipulation ) செய்துள்ளார் அதானி. இன்று ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால், உலக பணக்காரர் பட்டியலில் 36வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மக்கள் எஸ்பிஐ, எல்ஐசி-யில் போட்ட பணத்தை கடனாக பெற்று அதானி ஃபிராடு செய்துள்ளார். அந்த ஃபிராடுக்கு யார் காரணம்? இன்று அதானி ஃபிராடு என்று சொல்லப்பட்டால், உடந்தையாக இருந்த பிரதமரும் குற்றவாளி தானே. அதனை சொல்வதற்கு திமுகவுக்கு மட்டுமே தைரியம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications