இன்றைய கிரைம்.. சகோதரியின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது.. பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சகோதரியின் கள்ளக்காதலனை 12 ஆண்டுகள் காத்திருந்து தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் மற்றொரு வழக்கில் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தை அடுத்த சின்ன ஐயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கணவரை பிரிந்த ஷீலா இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதனை சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த ஷீலாவின் தம்பி ராஜ், கடந்த 10 ஆண்டுகளாக கனகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

21 வயதாகும் ராஜ் நேற்று முன் தினம் இரவு தனது நண்பர்கள் மற்றும் கனகராஜுடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ராஜ் தனது கையில் உள்ள மதுபாட்டிலால் கனகராஜை குத்தி கொலை செய்து விட்டார். இதையடுத்து அடையாளம் தெரியாமல் இருக்க அம்மிக்கல்லை கொண்டு கனகராஜின் முகத்தை சிதைத்துவிட்டனர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம் சென்னை கோயம்பேட்டில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நெற்குன்றம்

நெற்குன்றம்

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது கணவனை இழந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் தனியாக இருந்த போது ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் பாண்டியன் அவரது வீட்டிற்குள் சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அக்கம்பக்கம்

அக்கம்பக்கம்

இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்தனர். இதையடுத்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+