Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியன் வங்கி.. பளபளன்னு தங்க நகைகள்.. காஞ்சிபுரம் 3 கிளையிலும் நுழைந்த ஆபீசர்ஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும்கூட, பல்வேறு இடங்களில் ஏமாந்துவிடுகிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரத்திலும் ஒரு மோசடி நடந்துள்ளது.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி, கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கி கிளைகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

Indian Bank Kanchipuram Branch and Do you know how to identify fake gold jewellery

அடமானம்: அப்போது, கடந்த 2023 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த 3 வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா நகைகளுக்கும் தங்கம் மூலாம் பூசி அடமானம் வைத்திருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த போலி நகைகளை மோசடி செய்து அடமானம் வைத்தவர்கள் யார் என்ற விபரங்களை சேகரிக்கும் பணி நடந்தது.. இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தந்ததையடுத்து, போலி நகைகளை அடமானம் வைத்தவர்களை பிடித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை: அந்த விசாரணையில், மோசடி செய்வதற்காகவே கவரிங் நகைகளுக்கு தங்கம் மூலம் பூசி நகைகளை தயார் செய்தது உறுதியானது.. இந்த நகைகளை அடமானம் வைத்து, 3 வங்கிகளிலுமே 2 கோடியே 53 லட்சம் மோசடியாக போலி தங்க நகைகள் அடகு வைத்து பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்தர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி நகை மோசடியில் தொடர்புடைய பள்ளுரை சேர்ந்த ராஜேஷ்,சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் மேலும் சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 3 வங்கி கிளைகளிலும், முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

3 பேர் கைது: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வரும்நிலையில், தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.. அதுவும், ஒரிஜினல் போலவே, போலி தங்கத்தை தயார் செய்கிறார்கள்.. இதில் எது அசல்? எது போலி? என்பது கண்டுபிடிக்கவே முடிவதில்லையாம். அந்த அளவிற்கு தகிடுதத்தம் வேலை நடப்பதாக சொல்கிறார்கள்.

இந்த போலி நகைகள் எப்படி உருவாக்குகிறார்கள் தெரியுமா? முதலில் கவரிங்கில் நகையை செய்துகொண்டு, அதில், தகட்டில் தங்கத்தை கோட்டிங் செய்துவிடுவார்கள்.. இதை பார்த்தால் அச்சுஅசல் தங்கம் போலவே இருப்பதால், ஏமாறுவதும் எளிதாகிவிடுகிறது. எனவே, தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களும் அந்த நகையை உரசி பார்த்து, சொல்லிவிடுவார்கள்.

போலி நகைகள்: அதேபோல, ஹால்மார்க் முத்திரை இருந்தாலும்கூட, ஹார்மார்க் சென்ட்டருக்கே சென்று, இதை பற்றி விசாரித்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, 916 முத்திரையுடன் நகைகளை வாங்குவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கிறார்கள். எனவே, உங்களுக்கு நகை வாங்குவதில், விற்பதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், பாரம்பரிய ஆசாரிகளிடம் அணுகுவது சிறந்தது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+