காஞ்சிபுரம் கிணற்றில் மிதந்த உருவம்.. அரசு மருத்துவமனையில் இப்படியா? ஸ்ரீதேவியால் ஆடிப்போன காஞ்சி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: சிகிச்சையில் உள்ள இளம்பெண் நள்ளிரவில் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறியது எப்படி? போதுமான பாதுகாப்புகள் மருத்துவமனைகளில் இல்லையா? என்ற சந்தேகம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. என்ன நடந்தது காஞ்சிபுரத்தில்?

காஞ்சிபுரம் மாவட்டம், கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதாகிறது.. இவர் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

kanchipuram government hospital kancheepuram

இதே கம்பெனியில் பணியாற்றி வந்த நபருடன் ஸ்ரீதேவிக்கு நட்பு ஏற்பட்டது.. இந்த நபர் திண்டிவனத்தை சேர்ந்தவராம்.. இவர்களது நட்பானது காதலாக மாறியிருக்கிறது.. பிறகு 2 பேரும், வெளியிடங்களுக்கு எல்லாம் சுற்றி, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கர்ப்பம்:
இதில், ஸ்ரீதேவி கர்ப்பமாகி உள்ளார்.. இந்த விஷயத்தை காதலரிடம் சொல்லி, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார்.. ஆனால், அதற்கு அந்த நபர் மறுத்துவிட்டாராம்.

இதனிடையே, ஸ்ரீதேவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.. இதை தன்னுடைய அக்கா-மாமாவிடம் சொல்லவும், அவர்களும் ஸ்ரீதேவையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சற்று நேரத்தில் ஸ்ரீதேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... அப்போதுதான், ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்த விஷயமே குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது.. இதைக்கேள்விப்பட்ட ஸ்ரீதேவியின் அம்மா, மருத்துவமனைக்கு வந்து, மகளை கோபத்துடன் திட்டியிருக்கிறார்.

மருத்துவமனை இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ஸ்ரீதேவி, தன்னுடைய குழந்தையுடன் வெளியேறியிருக்கிறார்.. கலியனூர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு சென்றுவிட்டார்.. நேற்று காலை, மருத்துவமனையில் ஸ்ரீதேவியும், குழந்தையும் இல்லாததை கண்ட டாக்டர்கள், உடனடியாக காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தந்தனர்..

இதையடுத்து போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீதேவியை தேட துவங்கினர்.. தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு, அவரை கண்டுபிடித்தனர்.. குழந்தை இல்லாமல் ஸ்ரீதேவி மட்டும் இருப்பதை கண்ட போலீசார், குழந்தை எங்கே? என்று கேட்டுள்ளனர்.

பாழடைந்த கிணறு: அதற்கு ஸ்ரீதேவி பதில் சொல்ல முடியாமல் திணறினார்.. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், துருவித்துருவி கேட்டதையடுத்து, காதலன் மீது கோபத்தில் இருந்ததாகவும், அளவுக்கு அதிகமான மன உளைச்சலில் இருந்ததாலும், குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்தார்..


இதையடுத்து, ஸ்ரீதேவியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. அத்துடன், ஸ்ரீதேவியை ஏமாற்றி மோசம் செய்த, திண்டுக்கல் காதலனிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

ஆனால், 23 வயது இளம்பெண், நிறைமாத கர்ப்பமாக இருக்கும்வரை, குடும்பத்தினருக்கு எப்படி தெரியாமல் போனது? என்பது போன்ற சந்தேகங்களும் இதில் கிளம்பியிருக்கின்றன..


பாதுகாப்பு: அதுமட்டுமல்ல, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், செக்யூரிட்டிகள், சிசிடிவி கேமராக்களையும் மீறி இளம்பெண் குழந்தையுடன் வெளியேறியிருக்கும் நிலையில், பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மாயமான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில், இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை, பாழடைந்த கிணற்றில் இளம்பெண் வீசி கொன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+