பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.. மனைவியுடன் மீண்டும் உல்லாசம்.. 19 வயது தினேஷை அடித்தே கொன்ற கணவர்
காஞ்சிபுரம்: பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மீண்டும் மனைவியுடன் உல்லாசமாக இருந்த 19 வயது இளைஞரை அவரது கணவர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து ஏரியில் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தான்தோன்றித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளார் இந்நிலையில் தினேஷுக்கும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (43) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
இதனால் தினேஷை ரவிச்சந்திரன் மற்றும் அவர்களது உறவினர்கள் கண்டித்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையேயான கள்ளகாதல் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார்.

கைகலப்பு
இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்திலிருந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு மீண்டும் வந்த தினேஷிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் உருட்டுக்கட்டையால் தனது மனைவியுடன் அடிக்கடி கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தினேஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். சம்பவ இடத்திலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

10 அடி ஆழத்தில்
அதன் பிறகு தினேஷின் உடலை காரை கிராமத்தின் அருகே உள்ள மோட்டூர் ஏரியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு 10 அடி பள்ளம் தோண்டி உடலைப் புதைத்து உள்ளார் அதன் பிறகு வழக்கறிஞருடன் இன்று தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

போலீசில் சரண்
அங்கு நடந்த சம்பவத்தை கூறி ரவிச்சந்திரன் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ்.பி.சண்முகப்பிரியா, வட்டாட்சியர் பவானி ஆகியோர் முன்னிலையில் இன்று தினேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தொடர்ந்து ரவிச்சந்திரனை கைது செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மனைவியுடன் உல்லாசமாக இருந்த 19 வயது கள்ளக்காதலன் இளைஞரை கணவர் கொலை செய்து ஏரியில் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications