மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண் மர்ம மரணம்.. ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மசாஜ் சென்டரில் வேலை பார்த்த வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    செய்தி தெரியுமா? | 04-03-2020 | OneindiaTamil News

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது செட்டிபேடு பகுதி... இங்குள்ள தண்டம் பகுதியில் 7 வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கி உள்ளனர்.. இவர்கள் அனைவருமே நாகலாந்ததை சேர்ந்தவர்கள்.

    Mysterious death of Northland woman near chennai

    அனைவருமே ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இதில் ஒருவர்தான் சுங் சூன் மொய்.. இவருக்கு வயது 22.. நாகலாந்து மாநில பெண்களுடன் சேர்ந்து மொத்தம் 10 பெண்கள் ஒன்றாக தங்கி வந்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எல்லோருமே வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர்.. பிறகு வழக்கம்போல தூங்க போய்விட்டனர். ஆனால் நேற்று காலையில் மற்ற பெண்கள் எழுந்து பார்த்தபோதுதான் சுங் சூன் மொய் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.. இதை பார்த்துஅலறிய பெண்கள், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இது கொலையா, தற்கொலையா என்றுகூட தெரியவில்லை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது...மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+