"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே".. கண்ணீர் விட்ட மணிகண்டன்
காஞ்சிபுரம் அருகே 50 புறாக்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
மதுராந்தகம்: "ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே" என்று மணிகண்டன் கண்ணீர் வடித்தது காண்போரை கலங்க செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு புறா என்றால் ரொம்ப பிடிக்கும்.
அதனால் தன்னுடைய வீட்டில் 200க்கும் மேற்பட்ட புறாக்களை ஆசையாக வளர்த்து வருகிறார். இந்த புறாக்களை யாருக்கும் இவர் விற்பது கிடையாது. இறைச்சிக்காக பயன்படுத்தி கொள்வதும் கிடையாது. தனிப்பட்ட ஆசையால் இந்த புறாக்களை வளர்த்து வருகிறார்.

அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென இவர் வீட்டின் மாடியில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன. இதை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். ஆனால், புறாக்கள் வெளியில் ஏதாவது விஷம் கலந்த உணவை சாப்பிட்டிருக்கும், அதனால்தான் இறந்து போயிருக்கும் என்று நினைத்துவிட்டார். இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் விட்டுள்ளார்.

இரை
இந்நிலையில், இன்று காலை வீட்டில் அடைத்து வைத்திருந்த புறாக்களை வழக்கம்போல் கூண்டில் இருந்து திறந்துவிட்டார். திறந்து விட்ட புறாக்கள் வீட்டின் எதிரே சாலையில் இரை சாப்பிட்டு கொண்டிருந்தன. இதை மணிகண்டன் பார்த்து கொண்டே இருந்தார்.

பதறினார்
அப்போது, திடீரென 50 க்கும் மேற்பட்ட புறாக்கள் துடிதுடித்து ஒவ்வொன்றாக இறந்து விழுந்தன. கண்ணெதிரில் ஆசை ஆசையாக வளர்த்த புறாக்கள் துடிதுடித்து விழுவதை கண்ட மணிகண்டன் பதறி துடித்தார். இவரது வீடு ரோட்டோரம் இருப்பதால் நெல்லில் யாரோ விஷம் கலந்து தூவி சென்று உள்ளனர் என்றும், அதை தின்ற புறாக்கள் துடிதுடித்து இறந்து விட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.

விசாரணை
இதனால் மணிகண்டன் படாளம் போலீசிலும் புகார் அளித்துள்ளார். 50 புறாக்கள் இப்படி கொத்து கொத்தாக விழுந்து மடிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications