இளம் பெண் வயிற்றுக்குள் பஞ்சு! இப்படியும் செய்வாங்களா? அலட்சிய மருத்துவரால் கலகலத்த காஞ்சிபுரம்!
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இரண்டு வாரத்திற்கு முன்பு காப்பர் டியை அகற்றிய பெண்ணின் கருப்பைக்குள் இருந்து மருத்துவரின் அலட்சியத்தால், பஞ்சு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன். இவருடைய மனைவி கன்னிகா/32. இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கன்னிகா மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனம் காப்பர் டீ பொருத்தியுள்ளார். கடந்த 26ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மஞ்சுளாவால் காப்பர் டி அகற்றப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
அதன் பின்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று வரை கடினமான வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார்.அது மட்டுமல்லாமல் சாப்பிட முடியாமலும் நெஞ்சு வலியோடு, சிறுநீர் கழிக்கும் இடம் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் கன்னிகா அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டு வேதனையில் துடித்துள்ளார்.

கடும் வயிற்று வலி
இதனால் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கன்னிகா பணியில் இருந்த மருத்துவ பணியாளரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து பிரசவ அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ ஊழியர் கையில் க்ளவுஸ் அணிந்து கன்னிகாவைச் பரிசோதித்து திங்கள்கிழமை வா என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

வயிற்றில் பஞ்சு
இதனால் மீண்டும் வலி ஏற்பட்டு கன்னிகா வேதனையில் துடித்துள்ளார். இன்று காலை சிறுநீர் கழிக்கும்போது எலுமிச்சம் பழம் அளவிலான மருத்துவ மனையில் பயன்படுத்துகிற காட்டன் துணி கீழே வந்து விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன கன்னிகா மற்றும் உறவினர்கள் இன்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்து இதுகுறித்து மருத்துவ ஊழியரிடம் கூறியுள்ளனர். மருத்துவர் மற்றும் ஊழியர் பரிசோதனை செய்யாமலும், சரியான பதில் அளிக்காமலும் அலட்சியமாக பேசியுள்ளனர்.

போராட்டம்
இதனால் வேதனை அடைந்த கன்னிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ வளாகத்திலேயே போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் சொந்தமாக கிளினிக் வைத்திருப்பதால் அரசு மருத்துவமனையில் நடக்கின்ற அவலங்களை கண்டு கொள்வதில்லை என்றும் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications