திமுகவுடன் வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லை... வன்மமும் இல்லை.. ஆனால்! ஓபனாக பேசிய விஜய்
சென்னை: திமுகவுடன் வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லை... வன்மமும் இல்லை.. என்று பேசிய விஜய் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்ததாகவும், விஜய்யை ஏன் தொட்டோம் என நினைத்து நினைத்து ஃபீல் பண்ண போகிறீர்கள் என்றும் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் உள் அரங்கு கூட்டத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை அதுக்கப்புறம் கைப்பற்றினவர்கள் என்னலாம் பண்ணுறாஙக்ன்னு நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? என்ன மக்களே உங்களுக்குதான் அது நல்லா தெரியுமே.. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவுங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாதுங்க... எந்த வாய்க்கா வரப்பு தகராறும் எதுவும் இல்லை.
அப்படியே இருந்தாலும் அதை நாம கண்டுக்கவே போறது இல்லை.. தனிப்பட்ட முறையில் அவுங்களுக்கு வேண்டும் என்றால் நம்ம மேல வன்மம் இருக்கலாம். ஆனால், நாம அப்படி கிடையவே கிடையாது. ஆனால், உங்களை, நம்மள எல்லாரையும் பொய் சொல்லி நம்ப வச்சி ஓட்டு போட வச்சி ஏமாற்றுனார்கள் அல்லவா.. அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வது போல நடிக்கிறார்கள் அல்லவா... நாடகம் ஆடுகிறர்கள் அல்லவா.. அவுங்களை எப்படி நாம கேள்வி கேட்காமல் இருக்க முடியும். அதனால், அவர்களை கேள்வி கேட்காமல் விடப்போறதே இல்லை.
திமுகவின் கொள்கையே கொள்ளை தான். இதெல்லாம் மக்களுக்கும் யாருக்கும் தெரியாது என நினைத்துக்கிட்டிருக்கீங்களா? எங்க கட்சி ஒன்னும் சங்கர மடம் இல்லை என்று சொன்னது யார்? ஏன் சொன்னாங்க? இப்போ என்ன நடக்குது என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
திமுக தனது கொள்கையை அண்டர்கிரௌண்டில் அடகு வைத்துவிட்டது. பவள விழா பாப்பா, நீங்க பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது. அண்ணாவை, அவரது கொள்கைகளை மறந்தது யார்? கொள்கை? அது கிலோ என்ன விலை என அவர்கள் கேட்கிறார்கள்.
நமக்கு கொள்கை இல்லை என திமுக தலைவர் நம்மைப் பார்த்து சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? ஜீவநிதியான பாலாறை சுரண்டிவிட்டனர். நாசம் செய்துவிட்டனர். அழித்துவிட்டனர். பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மணல் எடுத்து கொள்ளையடித்துள்ளனர். ஏரி அழிந்தால் விவசாயம் அழியும்.
விவசாயம் அழிந்தால் நாமும் அழிய வேண்டியதுதான். மேலிருந்து கீழே வரை கொள்ளை அடிக்கிறார்கள். 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையம் தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லை. காஞ்சி நெசவாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் வெறும் ஐநூறு தான். சம்பள உயர்வு தரப்படவில்லை.
காவிரி டெல்டா விவசாயிகளை போல நெசவாளர்களையும் கைவிட்டுவிட்டது. ஒரு அரசாங்கத்தால் பேருந்து நிலையம் புதிதாக கட்டித்தர முடியாதா? சட்டமன்றம் தொடங்கி சாதாரண மேடையிலும் தவெகவை விமர்சிக்கிறார்கள். தவெக மீதான அவதூறுகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்.
சட்டமன்ற தேர்தலுக்கான சில அம்சங்கள் குறித்து பேச்சு: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், அது லட்சியம். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வருமானம், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் கட்டாயம் பட்டப்படிப்பு. அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சம் இல்லாமல் செல்ல வேண்டும். என்று விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications