காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சினை - தள்ளுமுள்ளு தாக்குதல்
காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை தென்கலை பிரிவினர் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்தது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை தென்கலை பிரிவினர் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்தது. இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி கோவிலில் இருந்து புறபட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அக்கோவிலின் அருகில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் புறப்பாடு நடைபெற்று நள்ளிரவு செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தாக்கிக்கொண்ட பக்தர்கள்
இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர். சித்ராபௌர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவத்தில் நடைபெற்ற இரு பிரிவினருக்கிடையேயான மோதல் இந்நிகழ்வை காண வந்த 1000க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற உத்தரவை மீறி
இக்கோவில் உற்சவத்தின் போது பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அவ்வுத்தரவை மீறி சில வடகலை பிரிவினர் வேண்டுமென்றே பிரச்சனைகளை எழுப்பி சண்டை போடுவதாக என கூறப்படுகிறது. இதனை இத்திருக்கோவில் மணியக்காரர் அவர்களிடத்தில் நீதிமன்ற உத்தரவினை சுட்டிகாட்டாமல் இது போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து கண்டும் காணமல் வடகலை பிரிவினர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வடகலை தென்கலை வித்தியாசம்
வட கலை மற்றும் தென் கலை நடுவே 18 வித்தியாசங்களாவது உண்டு என்பர். வட கலை வைணவர்கள், திருமாலையும், லட்சுமி தேவியையும் சரிசமமாக பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள், அதிக வடமொழி கலாச்சாரங்கள் உண்டு. தென் கலை வைணவர்களும், லட்சுமி தேவியை வணங்குவார்கள் என்றாலும், திருமாலை மட்டுமே மூல தெய்வமாக கருத வேண்டும் என்ற கொள்கை கொண்டோர். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு போன்றது. இதுதான் அடிப்படை வித்தியாசமாகும்.

தொடர்கதையாகும் மோதல்
காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை இடையே இதுபோல மோதல் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த வருடமும் இப்படியான பிரச்சினை நடந்தது. சாதுவாக காணப்படும் பக்தர்களா கோயில் என்றும் பார்க்காமல் இப்படி அடிதடியில் ஈடுபட்டனர் என்று, கேட்கும் அளவுக்கு, ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது போன்ற உற்சவ நாட்களில் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications