Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என்றென்றும் திமுக". திராவிட அரசியலில் 3வது குழல் நாங்க தான்! ஸ்டாலின் முன் உறுதியளித்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3வது குழலாக உள்ளதாக கருணாநிதி கூறினார். திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு. என்னென்றும் திமுகவின் 3வது குழலாக நாங்கள் இருந்து சனாதனத்தை எதிர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.

திமுகவின் 75வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் என்பது காஞ்சிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார்.

dmk tirumavalavan mk stalin

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே மனஸ்தாபம் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசியது தான் இதற்கு காரணம். அதன்பிறகு விசிகவின் ஆதவ் அர்ஜூன் கூறிய கருத்தும் சர்ச்சையானது.

இதனால் இன்றைய கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு என்பது அதிகம் கவனம் பெற்றது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது: திராவிட அரசியலில் திராவிட கழகம் முதல் குழல். திராவிட முன்னேற்ற கழகம் 2வது குழல் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்றாவது குழல் என்கிற அங்கீகாரத்தை தமிழர் தலைவர் கருணாநிதி தந்துள்ளார். திராவிட அரசியலில் 3வது குழலாக திமுகவுடன் நாங்கள் நிற்கிறோம். பவளவிழா காணும் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா அளவில் அனைத்து கட்சிகளுக்கு வழிகாட்டும் பேரியக்கம். அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி கட்சி திமுக அல்ல. இதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்தோடு திமுக வெற்றி நடை போடும் இயக்கமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6வது முறையாக ஆட்சி பீடத்தில் இருக்கிறது. நாடாளுமன்ற அவையில் அண்ணா I Belongs to Dravidian Stock என்று கூறினார். நான் திராவிடியன் ஸ்டாக்.. உங்களிடம் இருந்து மாறுபட்டவன்... வேறுபட்டவன் என்று பேசினார். அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி திமுகவின் தலைமை பொறுப்பு, ஆட்சி பொறுப்பையும் ஏற்றார். அவர் 5 முழக்கத்தை முன்னெடுத்தார். திராவிட கழக நிறுவனர் பெரியார் வழியில் கட்சி இயங்கும் என்று அண்ணா அறிவித்தார். ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தாலும் பெரியார் காலடியில் ஆட்சியை காணிக்கையாக வைப்போம் என்று கூறினார். அதுதான் அரசியல் முதிர்ச்சி. பெரியார் கொள்கையில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியாகி கூறினார்.

அதன்பிறகு அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்று கருணாநிதி பேசினார். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று அண்ணா வழியில் இயக்கத்தை பிரகடனப்படுத்தினார்.
சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்தார். காலம் காலமாக இருந்த நடைமுறைக்கு சம்மட்டி அடி கொடுத்தார்.

அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இருமொழி கொள்கையை உறுதிப்படுத்தினார். அதனை கருணாநிதி பின்பற்றினார். அதன்பிறகு ஸ்டாலினும் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்க்கிறார். இந்தி திணிப்பை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார். நேற்றைய பிரதமர் உடனான சந்திப்பு என்பது இதன் அடிப்படையிலானது தான்.

திராவிட மாடல் என்று கருணாநிதி கூட சொல்லவில்லை. ஆனால் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்றே கூறி வருகிறார்.
திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு. பெரியார் கொள்கை வாரிசு. ஸ்டாலினும் பெரியார் வழியில் தொடர்ந்து இயங்குகிறார் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்ற எந்த கட்சியையும் சொன்னது இல்லை. அதனை கூறியது திமுக தான்.

கோவிலில் குறிப்பிட்ட சாதியினரின் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றியவர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்து அனைவரையும் அர்ச்சகராக்கினார்.
கருணாநிதி வழியில் செயல்படும் ஸ்டாலின் 2019ல் , 2021, 2024ல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த கூட்டணி என்பது பிரச்சனைகள் அடிப்படையில் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. காவிரி போராட்டத்தில் தொடங்கிய இந்த அணி இன்று வரை கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆளுமைமிக்க ஸ்டாலின் வழிநடத்துதல் தான் காரணம்.

வெறும் பதவிக்கான அரசியலை ஸ்டாலின் செய்யவில்லை. இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகிறார். என்னென்றும் திராவிட அரசியலின் 3வது குழலாக நாங்கள் திமுகவுடன் இருப்போம். சனதான சக்திக்கு எதிராக சேர்ந்து செயல்படுவோம்'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+