அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: அந்த கூட்டணி, இந்தக் கூட்டணி என எந்த கூட்டணிக்கும் தவெக போகவில்லை, நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம் என இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் முரண் ஏற்பட்டதால் அக்கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் இருக்க சோனியா காந்தி விரும்பிய நிலையில் அவர்களுக்கு 28 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டு கூட்டணிக்கான டீலை திமுக முடித்தது.

இந்த நிலையில் தவெகவுடன் ராமதாஸ் பாமக கூட்டணி அமைக்கும் என சொல்லப்பட்டது. இது தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாஸை, செங்கோட்டையன் சந்திக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனாலும் அது நடக்கவில்லை.

என்டிஏ கூட்டணியில் தவெக இணைகிறது என சொல்லப்பட்டது. இதனால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 70 முதல் 80 சீட்டுகள் என்றெல்லாம் ஆஃபர்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் அந்த கூட்டணி அமையவில்லை.

விஜய் தலைமையில்தான் கூட்டணி என அக்கட்சியினர் சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் என்டிஏ கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு சிபிஐ மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக திமுக கூட்டணி கூறிவந்தது. இதனால் எப்படியாவது விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயன்றதாகவும் சொல்லப்பட்டது.

இந்த கூட்டணி ஏற்பட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை என்றாலும் விஜய்க்கு இருக்கும் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக தவெக தரப்பிடம் அமித்ஷா பேசி வந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இந்த பேச்சுகளுக்கு இதுவரை விஜய் வாய் திறக்காத நிலையில் தற்போது அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் விஜய் தனது தலையில் தொப்பி அணிந்து கொண்டு பேசுகையில், நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது. அந்த டீம், இந்த டீம் என சொன்னார்கள், ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

அதன் பிறகு வேறு என்ன பரப்பலாம் என நினைத்து செயல்பட்ட போதும் அது நடக்கவில்லை. இப்படியான நேரத்தில்தான் இந்த கூட்டணி, அந்த கூட்டணிக்கு போகிறார் என பொய்யான பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்திருப்பீர்கள்.

நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். நான், நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். நமது முதல் மாநாட்டில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை என சொல்லியிருந்தேன்.

அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனில் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+