அனைவருக்கும் நிரந்தர வீடு!அந்த வீட்டு வாசலில் கார், பைக்! தவெகவின் தேர்தல் அறிக்கையை வாசித்த விஜய்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: வீடு தோறும் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் அவசியம், அதற்கான வாய்ப்பை உருவாக்குவோம், சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும் என தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் அறிவித்தார். இதற்கான விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

vijay kanchipuram

இதுகுறித்து விஜய் பேசுகையில், வீடு தோறும் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் அவசியம், அதற்கான வாய்ப்பை உருவாக்குவோம். அதாவது பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். அனைவருக்கும் நிரந்தரமான வீடு கட்டித் தரப்படும்.

வீடுதோறும் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அரசு மருத்துவமனைக்கு அச்சம் இல்லாமல் மக்கள் செல்ல வேண்டும். வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம், அதற்கான வேலைவாய்ப்பு உருவாக்கணும்.

கல்வி

அதற்கு தகுந்தபடி கல்வியில் சீர்திருத்தம், பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு, மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சட்டம் ஒழுங்கு

தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும். சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன், வலிமையாக இருக்கும். இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் என விஜய் அறிவித்தார். மேலும் விஜய் பேசுகையில், "நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணா இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம்.

வழிகாட்டி

தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாதுரை படத்தை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்ணுகிறார்கள். நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன மக்களே? உங்களுக்கு தான் அது நல்லா தெரியுமே?

காஞ்சிபுரம் மண்

மக்களை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கி வென்றுவிட்டு தற்போது மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறார்கள். நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருப்பது. இந்த காஞ்சிபுரம் மண்ணிற்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

மன வேதனை

முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்து தான். இன்றைக்கு மன வேதனைக்கு பிறகு (கரூர் கூட்ட நெரிசல்) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் தான். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணா துரையை மறந்தது யார்?

யார் தற்குறி

யாரை பார்த்து தற்குறி என்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போடுவோரை பார்த்தா, இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்க போகிறார்கள். அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சரியக்குறிகள், மாற்றத்திற்கான அறிகுறி என விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+