என்னை சின்னப்பையன்னு நினைச்சிடாதீங்க! எங்களுக்கு எவ்வளவு சொத்து? -விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்
காஞ்சிபுரம்: தன்னை சின்னப் பையன் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மகனால் என்ன செய்துவிட முடியும் என யாரும் கணக்கு போட்டுவிட வேண்டாம் எனவும் விஜயபிரபாகரன் ஆவேசம் காட்டியுள்ளார்.
தேமுதிகவை தொடங்குவதற்கு முன்னால் தங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது தங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை பகிரங்கமாக வெளியிடத் தயார் என்றும் விஜயபிரபாகரன் பேசியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியதன் மூலம் சொந்த சொத்தை விற்று செலவு செய்து வருவதை சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக முன்கூட்டியே பேசினால், வேறுவழியில்லாமல் நம்மிடம் ஓடி வருகிறார்கள் என்றும் கடைசியில் பேசினால் பேரம் பேசுகிறார்கள் எனவும் தங்களை விமர்சிக்கிறார்கள் என்றும் ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்மானத்தோடு கட்சியை வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.
விஜயகாந்த் வீட்டில் இருப்பதால் தேமுதிக தேய்ந்துவிட்டதாக யாரும் நினைத்துவிட வேண்டாம் என்றும் 100 வருடம் அல்ல 200 வருடம் அல்ல 500 வருடமானாலும் தேமுதிக இயங்கும் என சூளுரைத்தார். ஊழல் செய்த திமுக, அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் போது எந்த தவறும் செய்யாத தேமுதிக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என வினவினார்.
தாங்கள் என்ன தவறு செய்துவிட்டோம் என்றும் பிறகு ஏன் தேமுதிகவை பற்றி அவதூறுகளையும், விமர்சனங்களையும் மீடியாக்கள் முன் வைக்கிறது எனவும் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய பிரபாகரனின் பேச்சு சலசலப்பை உருவாக்கியுள்ளது. திமுக, அதிமுக இல்லாமல் வேறு எந்தக் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications