காஞ்சிபுரம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பில் நடந்தது என்ன.. வடகலை - தென்கலை வாக்குவாதம் ஏன்?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடந்தது. அந்த நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர் முதலில் பாடுவதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் வந்த பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் பாட அனுமதித்தனர். அதன்பின்னரும் பிரச்சனை செய்தவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
காஞ்சிபுரம் என்பது கோயில்களின் நகரம் ஆகும். இங்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்துக்களுக்கு வட மாநிலத்தில் புனிதத் தலங்களில் பிரதானமாக காசி (வாரணாசி) இருக்கிறது. அதேபோல் தென்மாநிலங்களில் புனித தலங்களை கொண்ட பிரதான ஊராக காஞ்சிபுரம் இருக்கிறது.. காஞ்சிபுரத்தில் ஏராளமான 8 சிவ தலங்களும், ஏராளமான வைணவ தலங்களும் உள்ளன. காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருக்கச்சி மேற்றளி, திருவோணக்காந்தான் தளி, காரை திருநாதேஸ்வரர், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில், அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில், திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன.

இதில் காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ தலங்களை பொறுத்தவரை வடகலை தென்கலை பிரிவினரிடையே திவ்ய பிரபந்தம் பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இன்று உலகெங்கும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயிலும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இன்று அதிகாலையில் திறக்கப்பட்ட உடன், அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பு வடகலை மற்றும் தென்களை பிரிவினர் இடையே யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக பிரச்சனையை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் வடகலை பிரிவினரை திவ்ய பிரபந்தம் பாட அழைத்ததாக கூறப்படுகிறது.அதேநேரம் தென்கலை பிரிவினர் முதலில் பாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வந்த பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் பாட அனுமதித்தனர். அதன்பின்னரும் பிரச்சனை செய்தவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications