ஏரிக்கரைக்கு போன ஜோடி.. திடீர்னு அந்த கேள்வியை கேட்ட இளம்பெண்.. பனியனை கழட்டி.. கலங்கிய காஞ்சிபுரம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: 3 வருடமாக ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலித்துவிட்டு, இன்னொரு பெண்ணிடமும் முறையற்ற உறவு வைத்திருந்துள்ளார் சாமுவேல்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஏலக்காய் மங்கலம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ஷீபா.. 25 வயதாகிறது.. இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

Why did young man kill his girl friend and what happened near Kancheepuram district

இந்த நிலையில் அவர் 2 நாட்களுக்கு முன்பு, தோழி வீட்டுக்கு போவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியே கிளம்பி சென்றார்.. ஆனால், வீடு திரும்பவில்லை.. இதனால், பதறிப்போன பெற்றோர், போலீசில் புகார் தந்தனர்.

அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து ஷீபாவை தேடி வந்தனர்... பிறகு அவரது செல்போனை ஆராய்ந்தனர்.. அப்போது அவர் கடைசியாக சாமுவேல் என்பவரிடம் பேசியுள்ளது தெரியவந்தது.. பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்.. 26 வயதாகிறது..

வரம்புமீறல்: இதையடுத்து சாமுவேலை பிடித்து போலீசார் விசாரித்தனர்.. அப்போதுதான் மொத்த விஷயத்தையும் போலீசாரிடம் சொன்னார்.. ஷீபாவும், சாமுவேலும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. அப்போது, திடீரென ஷீபாவை விட்டுவிட்டு, ஷீபாவின் தோழியுடன் சாமுவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பழக்கம் வரம்புமீறியும் போயுள்ளது. இந்த விஷயம் ஷீபாவுக்கு தெரியவந்துள்ளது.. காதலன் தனக்கு துரோகம் செய்வதை அறிந்து அதிர்ச்சியுற்றார்.. இதற்கு சாமுவேலிடமே நியாயம் கேட்டார்..

ஆனால் சாமுவேல் இதற்கு சரியாக பதிலை சொல்லாமல் மழுப்பியிருக்கிறார்.. இதனால், காதலர்கள் 2 பேருக்குமே தகராறு வெடித்துள்ளது.. எப்போது அந்த பெண்ணை பற்றின உறவை கேட்டாலும், சாமுவேல் சமாளித்தே வந்துள்ளார்.. அதனால் ஒருகட்டத்தில் ஷீபா திருமண பேச்சை எடுத்தார்.. உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாமுவேலை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சாமுவேல் இதற்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

நிம்மதி: எப்பவுமே தகராறும், வாக்குவாதமுமாக இருப்பதால், வெளியூருக்கு சென்று சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று ஷீபாவை அழைத்துள்ளார் சாமுவேல்.. அதன்படி, கடந்த 24ம் தேதி அன்று, காரை எடுத்து கிளம்பி உள்ளனர்.. சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கோவளவேடு ஏரிக்கு ஷீபாவை அழைத்து சென்றிருக்கிறார் சாமுவேல்.. அங்கு தான் அணிந்திருந்த பனியன் மூலம் ஷீபாவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.. சடலத்தை ஏரியின் மதகு அடியில் வீசி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.. இவ்வளவையும் போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லியதையடுத்து, சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.

Why did young man kill his girl friend and what happened near Kancheepuram district

பிறகு, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று உயிரிழந்த ஷீபாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. கோவலவேடு ஏரிப்பகுதிக்கு ஷீபாவை அழைத்து செல்லும்போது, அவரை கொலை செய்யும் நோக்கமே கிடையாதாம்.. ஏரிப்பகுதிக்கு ஷீபாவுடன் ஜாலியாக இருந்திருக்கிறார்.. அப்போது, மறுபடியும் கல்யாண பேச்சை ஷீபா எடுத்ததால்தான், கோபமடைந்ததாகவும், ஷீபாவின் கழுத்தை டி-ஷர்ட் மூலம் நெரித்து கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சாமுவேலிடம் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+