கன்னியாகுமரியில் 1 லட்சம் லஞ்சம்.. நாகர்கோவில் இன்ஸ்பெக்டரை சிக்க வைத்தது யார்.. எப்படி நடந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் உள்ள நேசமணி நகா் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அன்பு பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவிலில் ஒருவரை அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுத்து, இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர். எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வருவாய்துறை, காவல், சட்டம், நீதி, மின்சாரம், சிறைத்துறை, வேளாண் துறை, பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை, என தமிழ்நாட்டில் எந்த துறையில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலும், ஆடியோ ஆதாரம் மற்றும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அந்த வகையில் பலர் புகார் அளித்து வருகிறார்கள். அவர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் காவல் நிலைய அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக 58 வயதாகும் அன்பு பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் மீது அண்மையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து நகை-பணம் இருந்ததாக கூறப்பட்டது. இந்த பிரச்சனை ஒரு புறம் எனில், மீண்டும் லஞ்சம் வாங்கியதால் அவர் நேற்று கையும் களவுமாக சிக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் இந்து தமிழர் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். இவர் மீது நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி புகார் வந்தது. இந்த வழக்கில் சந்தை ராஜனின் பெயரை சேர்க்காமல் விடுவிக்க ரூ.3 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், ராஜனிடம் கூறினாராம். இதையடுத்து ராஜனும் ரூ.1.85 லட்சத்தை அன்பு பிரகாஷிடம் கொடுத்தாராம்.
பின்னர் மீதமுள்ள லஞ்ச பணத்தையும் கேட்டு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் அவரை மிரட்டியதாக புகார் எழுந்தது. ஆனால் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார். பிறகு போலீசாரின் அறிவுரை படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1.15 லட்சத்தை நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் வைத்து அவரிடம் ராஜன் கொடுத்தாராம்.
லஞ்ச பணத்தை இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசை கைது செய்தனர். லஞ்சம் வாங்கி கைதான அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கட்சி நிர்வாகியிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications