கன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications