ஆஹா! ராகுல் காந்தி டி சர்ட்டை பாருங்க.. காங். யாத்திரையால்.. பாஜக கண்ணுல பயம் தெரியுதோ? "ட்விஸ்டு"!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் யாத்திரை குறித்து பாஜக செய்துள்ள போஸ்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாரத் ஜுடோ யாத்திரையின் 3வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. இன்று தக்கலை வரை மூன்றாவது நாள் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார்.இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இவர் தமிழ்நாடு எல்லையை கடப்பார் என்று கூறப்படுகிறிது. ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர்.

தேசிய அளவில் கவனம்

தேசிய அளவில் கவனம்

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர். அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார்.

மக்கள் சந்திப்பு

மக்கள் சந்திப்பு

அப்படியே வெறுமனே நடக்காமல் ராகுல் காந்தி மக்களை சந்திக்கிறார். அந்த பகுதிகளில் இருக்கும் முக்கிய நபர்களை சந்திக்கிறார். அந்த பகுதியில் உள்ள இயக்கங்களின் தலைவர்களை சந்திக்கிறார். இதனால் சந்திப்பு அரசியல் ரீதியாக ராகுல் காந்திக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நடைபயணமாக இந்த யாத்திரை பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இதை பாஜக விமர்சனம் செய்துள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

ராகுல் காந்தியின் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளது. அதில் ராகுல் காந்தியின் டி ஷர்ட்டை போட்டு காட்டி அதன் விலை 41 ஆயிரம் என்று குறிப்பிட்டு உள்ளது. பொதுவாக அரசியல் தலைவர்கள் இது போல காஸ்ட்லி டீ ஷர்ட், காஸ்ட்லி உடை அணிவது வழக்கம்தான். ஆனால் பாஜக இதை பகிர்ந்து.. பாரத மக்களே பாருங்கள் என்று விமர்சனம் செய்துள்ளது. பாஜக ராகுலின் நடைப்பயணத்தை பார்த்து அரண்டுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

சரல் பட்டேல்

சரல் பட்டேல்

பாஜக மூத்த தலைவர் சரல் பட்டேல் இதற்கு அளித்துள்ள பதிலில், காங்கிரஸ் யாத்திரைக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து பாஜக மிரண்டு போய் உள்ளது. இதனால் மக்களை திசை திருப்ப அக்கட்சி பார்க்கிறது. செய்தி சேனல்கள் ராகுல் காந்தியின் யாத்திரையை செய்தி போட கூடாது என்று உத்தரவு சென்றுள்ளது. ஆனால் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை மக்கள் இடையே பேசுபொருளாகி உள்ளது. இதை தடுக்க பாஜக முயற்சிகளை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+