கன்னியாகுமரியில் கல்யாணமான 18-வது நாளிலேயே.. புதுக்கோட்டையில் தாலி ஏறும் முன்பு.. மணப்பெண்கள் ஓட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். கடந்த 3ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணமான 18 நாளிலேயே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் திடீரென மாயமாகிவிட்டார். இதை பார்த்து புதுமாப்பிள்ளை தவித்து போயிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த இளைஞருக்கு 31 வயது ஆகிறது. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கன்னியாகுமரி பெண் மாயம்
இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 3-ந்தேதி கல்யாணம் நடந்தது. பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தள்ளார்கள். இந்த நிலையில் கல்யாணமாகி 18-வது நாளன்று (21-ந் தேதி) மாலையில் புதுப்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். அந்த சமயத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய மணமகனின் தாயார், மருமகளை காணாமல் பயந்து போயிருக்கிறார்.
செல்போன் ஸ்விட்ச் ஆப்
இதையடுத்து தனது மகனுக்கு நடந்த விவரத்தை கூறி வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து இருவரும் பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் வீட்டில் தேடிய போது தாலி செயின் மட்டும் இருந்திருக்கிறது. இதனால் தாலியை புதுப்பெண் கழற்றி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று நினைத்துள்ளார். இதனிடையே மாயமான மனைவி தனது கணவனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
வாய்ஸ் மெசேஜ்
அதில், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன். தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோஷமாக வாழ முடியல 'ப்ளீஸ்' என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் பரிதவித்து போயிருக்கிறார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதை பெற்றோர்கள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவி ஆண்கள், இதுபோன்ற பெண்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் புதுக்கோட்டையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மண்டபத்தில் இருந்து மணப்பெண் ஓட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் 23 வயதான மகள், சென்னையில் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். தபால் அதிகாரியான பெண்ணுக்கும், சேலம் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாண்மைத்துறையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடத்ததிட்டமிட்டு பணிகளை செய்து வந்தார்கள்.
திருமணம் பிடிக்கவில்லை
இதற்காக மணப்பெண், மணமகன் வீட்டார் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் தாலி கட்டுவதற்கு முன்பு திருமண சடங்குகள் செய்ய வேண்டும் என்பதால் மணப்பெண்ணை அழைத்து வருவதற்காக அவரது அறைக்கு உறவினர்கள் சென்றனர். ஆனால் அறையில் மணப்பெண் இல்லை. மண்டபத்தில் இருந்து மணப்பெண் திடீரென ஓடிப்போய்விட்டார். தபால் அதிகாரியான மணப்பெண்இ தனது தாய்க்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், 'எனக்கு திருமணம் பிடிக்கவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம்' என தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications