50 சென்ட் நிலம், சிட்டா ரெடி? ஹெக்டேருக்கு ரூ.1,35,855 மானியம்! சிறு, குறு விவசாயிகளுக்கு குட்நியூஸ்
கன்னியாகுமரி: தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. இதில் முக்கியமாக பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது.. இதில், சிறு, குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்தால் பயன்பெறலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகளும் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கன்னியாகுமரி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது.. சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட உள்ளது.

அதாவது, சிறு, குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,35,855 வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.56,600, பெரிய விவசாயிக்கு ரூ.43,900 மானியமாக வழங்கப்படுகிறது. குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டர் வரையிலும், சிறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிட விவசாயிகள்
அதேபோல, சிறுகுறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குத்தகை நிலமாக இருந்தால், 7 வருடங்களுக்கு பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். விவசாயிகள் அரசு அங்கீகரித்தவைகளில் தாங்கள் விரும்பும் நீர் வனங்களின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். நுண்ணீர் பாசன அமைப்புக்கு பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியங்கள் வழங்கப்படுகிறது.
எனவே, பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்கலில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நிலவரைப்படம், சிறுகுறு விவசாயிகளாக இருந்தால், அதற்கான வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இணையதள சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்..
சொட்டுநீர்ப்பாசனம்
இதில், சொட்டுநீர்ப் பாசன மானிய திட்டத்தை எடுத்துக் கொண்டால், சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம். தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழ மரப்பயிர்களுக்கும், தேக்கு, மகோகனி மரங்கள், தக்காளி, மிளகாய் என காய்கறிப் பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் மிக முக்கியமானதாக விளங்குகிறது.
4 அடி இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புக்கு, பெரிய விவசாயி என்றால் ஹெக்டேருக்கு, ரூ.1,05,530 வழங்கப்படுகிறது.. எனவே இதன் பலனை பல விவசாயிகள் நேரடியாகவே பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
கன்னியாகுமரிக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில், கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அம்மாவட்ட மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சொட்டுநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பயன்பெறலாம்..
விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,35,855 , சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.56,600, பெரிய விவசாயிக்கு ரூ.43,900 மானியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications