"ஏய் ஏய், நைட் 11 மணிக்கு வந்துடுடா.. ஆசையா கூப்பிட்டாளே, ஆனா இப்போ".. புலம்பிய நபரால் குழம்பிய குமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நம்பிக்கை துரோகம் செய்த காதலியால் நிலைகுலைந்து போயுள்ளார் அந்த இளைஞர்.. ஆனால், சிறையில் உள்ளார்.. என்ன காரணம்? தக்கலையில் என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபின்.. 27 வயதாகிறது.. இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர். இவர் அதே சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

 Did the girl friend cheat her boyfriend and what happened in Kanniyakumari thakkalai

அந்த பெண்ணும், இவரை காதலித்துள்ளார்.. 2 பேருமே காலேஜ் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர்... மொத்தம் 8 ஆண்டு காதல் இது.. காலேஜ் போகும்போது, 2 பேருமே பைக்கில் ஊர் சுற்றி திரிந்துள்ளனர்.. ஷாப்பிங், டேட்டிங் என்று ரவுண்டு கட்டி வந்துள்ளனர்..

ஷாப்பிங் : இவர்கள் ஷாப்பிங் போகும்போதெல்லாம் ஜெபின், தன்னுடைய காதலிக்கு காஸ்ட்லி பொருட்களை பரிசாக வாங்கி தந்து அசத்திவிடுவாராம்.. லோக்கலிலேயே பைக்கில் ரவுண்டு அடித்து கொண்டிருந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பறந்தது.. அங்கு சென்று ரூம் எடுத்து தங்கி, ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது.. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜெபின் வேலைக்காக வெளிநாடுக்கு அதாவது பெஹ்ரைன் சென்றிருக்கிறார்.. காதலியும், தக்கலையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

வீடியோகால்: இருவரும் இரவு நேரங்களில் வீடியோ காலில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்... இந்த நிலையில், காதலியின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது.. வேலைக்கு சென்ற இடத்தில், சக நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.. இந்த விஷயம் ஜெபினுக்கு தெரிந்து, காதலியை கண்டித்துள்ளார்.. இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது... நிறைய அட்வைஸ்களை ஜெபின் தரவும், காதலித்துக்கு அது பிடிக்கவில்லை.. அதனால், ஜெபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது..

இப்படியே விட்டால், நிலைமை விபரீதமாகிவிடும், வெளிநாட்டில் இருந்து கிளம்பி 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் ஜெபின். காதலியின் வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார்.. ஆனால் அவரது பெற்றோர், பெண் கொடுக்க சம்மதிக்கவில்லை. பிறகு அந்த பெண், ஜெபினுக்கு போனை போட்டு, "எதுக்காக பெண் கேட்டு வீட்டுக்கு வந்தாய்? நீ ஒரு சைக்கோ.. உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது.. என்னை மறந்து விடு. என் வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே" என்று சொல்லி போனை துண்டித்துள்ளார்..

மிட்நைட் தகராறு: இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமுமடைந்த ஜெபின், நேராக காதலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.. இதனால், அந்த பெண்ணின் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்துவிட்டனர்.. அவர்களிடமே நியாயம் கேட்டார் ஜெபின்.. காதலியுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோக்களை எல்லாம் அவர்களிடம் செல்போனில் காட்டி நியாயம் கேட்டார்.. எனினும், பெண்ணின் குடும்பத்தினர், ஜெபினை தட்டிக் கேட்டுள்ளார்.. அதற்கு ஜெபின், "என் அப்பா தூங்கிட்டார்.. நைட் 11 மணிக்கு வீட்டிற்கு வா" என்று என்னை பலமுறை அழைத்தவர் உங்க வீட்டு பெண்தானே? என்று ஆவேசமாக கத்தினார்..

இந்த தகவல் தக்கலை போலீசுக்கு எட்டியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. ஜெபினை பிடித்து தக்கலை ஸ்டேஷனுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெபின் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக இளம்பெண்ணின் அப்பா விஜயராஜ் புகார் தரவும், இதன்பேரில் ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் காட்டுதல், அத்துமீறி வீட்டில் நுழைவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இப்போது ஜெபின் ஜெயிலில் உள்ளார்.. தான் சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டோம் என்ற வேதனையைவிட, காதலி செய்த நம்பிக்கை துரோகம்தான், ஜெபினை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளதாக தெரிகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+