திமுகவுக்கு குட்பை? தவெகவுடன் கைகோர்க்கும் காங்.,? கிரிஷ் சோடங்கர் விவகாரத்தில் விஜய் வசந்த் பல்டி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தவெகவுடன் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது சொந்த கருத்து என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி கூறினார். இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் விஜய் வசந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியை முறித்துவிட்டு காங்கிரஸ் கட்சி விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால் திமுக- காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கடந்த முறை 25 தொகுதி போல் அல்லாமல் கூட்டணியில் 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.

dmk-congress-alliance-vijay-vasanth-says-my-words-has-been-grossly-misinterpreted-about-girish-ch

அழைக்காத திமுக

இதனை திமுக ரசிக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலினே கூறிவிட்டார். இருப்பினும் காங்கிரஸ் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் கூட காங்கிரஸ் கட்சியை தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

கிரிஷ் சோடங்கர் கருத்து

இதற்கிடையே தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர், ''தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக உள்ளது. தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது'' என்று கூறியிருந்தார். இது பரபரப்பை பற்ற வைத்தது.

விஜய் வசந்த் போட்ட வெடி

இதுபற்றி கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்திடம் கேள்வி கேட்கப்பட்டது. பத்திரிகையாளர் ஒருவர், ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக அழைக்கிறது என்று மேலிட பொறுப்பாளர் கூறியுள்ளாரே'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு விஜய் வசந்த், ''அவர் அவரது கருத்தை கூறியிருக்கிறார்.

எதுவாக இருந்தாலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்த் உள்ளிட்டோர் தான் முடிவு எடுப்பார்கள். மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்'' என்றார்.

விவாதமான விவகாரம்

விஜய் வசந்தின் இந்த கருத்தும் கவனம் பெற்றது. மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து அவரது சொந்த கருத்து என்று எப்படி சொல்கிறார் விஜய் வசந்த்?.

கிரிஷ் சோடங்கர் தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அப்படி இருக்கும்போது விஜய் வசந்த் திமுக கூட்டணியில் தொடரும் வகையில் பேசி உள்ளார் என்று பலரும் கருத்துகள் தெரிவித்தனர்.

விஜய் வசந்த் விளக்கம்

இந்நிலையில் தான் விஜய் வசந்த் தனது கருத்துக்கு எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''காங்கிரஸ் கட்சியின் உண்மையான சிப்பாயாக, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

நான் என்ன கூற நினைத்தேன் என்றால், ''காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தை கமிட்டியின் தலைவரான அவரது கருத்து தான் கட்சியின் மேலிட தலைமையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது'' என்றார்.

திமுகவிற்கு 'குட்பை'?

இதன்மூலம் விஜய் வசந்த் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். கிரிஷ் சோடங்கரின் கருத்தை முதலில் அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறிய விஜய் வசந்த் தற்போது அவரது கருத்து தான் மேலிட தலைவர்களின் கருத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் கிரிஷ் சோடங்கர் கூறியது போல் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச தயாராகி விட்டதா? தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+