பிஎஃப் பணம்.. 58 வயது ஆக போகிறதா.. மாத சம்பளம் வாங்குவோர் வரும் 27ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க
கன்னியாகுமரி: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமாகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக கன்னியமாகுமரி மாவட்ட வருங்கால வைப்புநிதி நிறுவன மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது. 58 வயது நிறைவு பெற போகிறவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடைபெறுவது வழக்கம், சில பகுதிகளில் மட்டும் 28ம் தேதி நடைபெறும். அதாவது 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாள் இந்த முகாம் கண்டிப்பாக நடைபெறும்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விவரங்களையும் அறியலாம். மேலும் இந்த முகாம்களில் நிறுவன முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் விளக்குவார்கள்..
மேலும் மாத சம்பளம் வாங்கி பிஎ ஃப் கணக்கு வைத்துள்ளவர்களக்கு ஆன்லைன் சேவைகள் பற்றியும் இபிஎப்ஓ அதிகாரிகள் விளக்குவார்கள். மேலும் இபிஎப் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நடைபெறுவதும் வழக்கம் ஆகும். மேலும் வைப்பு நிதி அலுவலகத்தின் புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாககும். தற்போது பிஎஃப்பில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்து ஊழியர்கள் எளிதாக அறிய முடியும்.
அதேபோல் பிஎஃப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்யப்படும்.. ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும் உடனே மேற்கொள்ளப்படுவது வழக்கம் ஆகும்.. ஃபிஎப் பணம் தொடர்பான புகார்கள் குறித்து குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தால் உடனடியாக நிவர்த்தி செய்து தருகிறார்கள்.அதிகாரிகள். இந்த முகாம் தமிழ்நாடு முழுவதும் வரும் 27ம் தேதி அன்று நடைபெறுவது வழக்கம்.
இதுபற்றி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் நாகர்கோவில் மண்டல அலுவலக ஆணையர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவன மண்டல அலுவலகம் மற்றும் நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து நடத்தும் வைப்புநிதி உங்கள் அருகில் மற்றும் 'சுவிதா சமாகம்' என்னும் குறைதீர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் எம்.எஸ்.ரோட்டில் அமைந்துள்ள பயோனியர் குமாரசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது.
இன்னும் 3 மாதங்களில் 58 வயதை அடையும் உறுப்பினர்கள் ஓய்வூதிய ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பான சந்தேகங்களை வைப்புநிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications