பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில்.. விவசாயிகள் செலுத்தியதோ ரூ.1 கோடி.. கிடைத்தது ரூ.7 கோடி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகையாக செலுத்தி இருக்கிறார்கள் என்பதும் அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7 கோடி பெற்றுள்ளார்கள் என்பதும் புள்ளி விவர தகவல்களில் தெரியவந்துள்ளது. அதேநேரம் 2023- 2024, 2024- 2025-ம் நிதி ஆண்டுகளில் யாரும் இழப்பீட்டுத் தொகை பெறவில்லை.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டப்படி விவசாயிகள் காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் இந்த ஆண்டு பயிர்காப்பீடு செய்துள்ளனர். இதேபோல் நெல், கரும்பு, கோதுமை உள்பட பல்வேறு பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் நாடு முழுவதும் பயன் பெற்று வருகின்றனர். 2016- 2017-ம் ஆண்டு முதல் 2024- 2025-ம் ஆண்டு வரை காப்பீடு திட்டம் சுமார் 9 வருடங்களை கடந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024- 2025-ம் ஆண்டுக்கான காப்பீடு நிறுவனமாக அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆண்டுகளில் காப்பீடு செய்த விவசாயிகள், இழப்பீடு பெற்ற விவசாயிகள், இழப்பீடு பெற்ற தொகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இதன்படி 2016-2017-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,197 விவசாயிகள் காப்பீடு செய்தனர். அவர்கள் 747 ஏக்கர் பரப்புக்கு செலுத்திய காப்பீட்டுத் தொகை ரூ.2.57 லட்சம் ஆகும். இதில் பயன்பெற்ற விவசாயிகள் எண்ணிக்கை 525 பேர் ஆவர். அவர்கள் பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.45.54 லட்சம் என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2017- 2018-ம் நிதி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,354 விவசாயிகள் 1,714 ஏக்கர் பரப்புக்கு ரூ.7.22 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தினர். இதில் 966 விவசாயிகள் பயன்பெற்று ரூ.1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளார்கள் என்பது புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018- 2019-ம் நிதி ஆண்டில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 2,850 விவசாயிகள் 2,533 ஏக்கர் பரப்புக்கு ரூ.11.13 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களில் 2,221 விவசாயிகள் ரூ.72.59 லட்சம் இழப்பீட்டுத் தெகையாக பெற்றுள்ளனர். 2019- 2020-ம் நிதி ஆண்டில் 3,832 விவசாயிகள் 2,956 ஏக்கர் பரப்புக்கு ரூ.15.13 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ளார்கள். அவர்களில் 3,309 விவசாயிகள் ரூ.2 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளார்கள்.
2020- 2021-ம் நிதி ஆண்டில் 2,874 விவசாயிகள் 4295.65 ஏக்கர் பரப்புக்கு ரூ.23.32 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ளார்கள். அவர்களில் 2,470 விவசாயிகள் ரூ.1 கோடியே 62 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 2021-2022-ம் நிதி ஆண்டில் 2,119 விவசாயிகள் 3,128 ஏக்கர் பரப்புக்கு ரூ.15.35 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தினர். அவர்களில் 998 விவசாயிகள் ரூ.60.29 லட்சம் காப்பீட்டு தொகையாக பெற்றுள்ளார்கள் என்று தகவல்கள் தெரியவந்துள்ளது.
2022- 2023-ம் நிதி ஆண்டில் 1,359 விவசாயிகள் 2,219 ஏக்கர் பரப்புக்கு ரூ.11.43 லட்சம் காப்பீட்டுத் தொகையாக செலுத்திய நிலையில், அவர்களில் 1,110 விவசாயிகள் ரூ.14.79 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளனர். 2023- 2024, 2024- 2025-ம் நிதி ஆண்டுகளில் 1,729 விவசாயிகள் 2,814 ஏக்கர் பரப்புக்கு ரூ.17.67 லட்சம் காப்பீட்டுத் தொகை செலுத்தினர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் யாரும் இழப்பீட்டுத் தொகை பெறவில்லை.
மொத்தம் 9 ஆண்டுகளில் 17,314 விவசாயிகள் 20,407 ஏக்கர் பரப்புக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 82 ஆயிரம் காப்பீடு தொகையாக செலுத்தினர். ஆனால் 12,819 விவசாயிகள் ரூ.7 கோடியே 18 லட்சத்துக்கு 48 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications