நியூசிலாந்து மாப்பிள்ளை.. ஒரு நிமிடத்தில் 5 லட்சம் சம்பாத்தியம்.. ஏமாந்த கன்னியாகுமரி இளம்பெண்
கன்னியாகுமரி: நான் அவனில்லை படத்தை போல் இப்போதும் பல படங்களை எடுக்க முடியும்.. ஆனால் என்னென்ன. மேட்ரிமோனியல் சைட்டுகளை மையமாக வைத்து எடுக்கலாம்.. ஏனெனில் அந்த அளவிற்கு ஆண்களும் பெண்களும் மேட்ரிமோனியல் சைட்டுகளில் வரும் தகவல்களை உண்மை என்று நம்பி ஏமாறுகிறார்கள்.. ஆண்கள் சிலர், வெளிநாட்டில் வேலை, கோடிகளில் சம்பளம் என்று அள்ளிவிடும் பொய்களை நம்பி, மேட்ரிமோனியலில் ஏமாறுகிறார்கள். அப்படித்தான் வெளிநாட்டு மணமகன்போல் நடித்து திருமண செயலி மூலம் வரன் தேடிய பெண்ணிடம் ரூ.4.94 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு உறவினர்கள் மூலமாகவோ, சொந்த ஊரிலோ அல்லது புரோக்கர்கள் மூலமாகவோ பெண் தேடுவது குறைந்துவிட்டது. பெற்றோர் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், ஆன்லைன் செயலிகள் மூலம் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள். ஆன்லைன் ஆப்பில் வரன் தேடும் ஆண் அல்லது பெண்ணின் புகைப்படம் உள்பட அனைத்து விவரங்களையும் பதிவிடுகிறார்கள். புகைப்படம் மற்றும் விவரங்கள் பிடித்து இருந்தால் ஒருவருக்கு ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக்கொள்ளும் வசதிகள் ஆன்லைனில் இருக்கின்றன. இதில் கோடிகளில் சம்பளம், கார்கள் இருக்கிறது. பெரிய பணக்காரன் என்று சிலர் கூறும் பொய்யான விஷயங்களை நம்பி பெண்கள் ஏமாறுகிறார்கள். அப்படி ஒரு பெண் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏமாந்துள்ளார்.

நியூசிலாந்து மாப்பிள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அருகே உள்ள மேல்பாலை தேவிக்கோடு பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் திருமணம் செய்ய ஆன்லைன் செயலியில் சுய விவரங்களை பதிவேற்றம் செய்துவிட்டு வரன் தேடியுள்ளார். அதன் பின்னர் நியூசிலாந்து நாட்டில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் திருமணத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் அவாிடம் பேசியிருக்கிறார். பின்னர் 2 பேரும் கடந்த சில மாதங்களாக பேசி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நபர், பெண்ணை சந்தித்து பேச இந்தியாவுக்கு வருவதாக கூறி இருக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்க்க ஆவலுடன் காத்திருந்துள்ளார்.
செல்போனில் அழைப்பு
இந்தநிலையில் பெண்ணுக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் விமான நிலைய அதிகாரி போன்று இந்தி மொழியில் பேசிய பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து வந்த நபர் அதிக பணம் எடுத்து கொண்டு வந்துள்ளார். எனவே விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே விடவேண்டும் என்றால் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5 லட்சம் காலி
அதை உண்மை என நம்பிய அந்த பெண் ரூ.4.94 லட்சத்தை குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்குக்கு அனுப்பினார். இதையடுத்து நேற்று காலையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர் மேலும் ரூ.5 லட்சம் செலுத்தினால் தான் வெளிநாட்டு நபரை விட முடியும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்படி பேசியதால், முதலில் ஏமாந்த இளம் பெண், அடுத்த முறை உஷார் ஆனார். பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பின்னர் வெளிநாட்டு மாப்பிள்ளையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று கூறி நூதன முறையில் மோசடி நடந்தது கன்னியாகுமரி இளம் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி எஸ்பியிடம் புகார்
இதுகுறித்து அந்த இளம்பெண், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு பண மோசடி குறித்து புகார் கொடுத்தார். உடனே எஸ் பி ஸ்டாலின் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண செயலி மூலம் வரன் தேடிய பெண்ணிடம் ரூ.4.94 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏமாற வேண்டாம்
யாராவது உங்களிடம் ஆன்லைனில் வரன் தேடும் போது, அமெரிக்காவில் இருந்து பேசுறேன்.. லண்டனில் இருந்து பேசுகிறேன்.. சுவிட்சர்லாந்தில் இருந்து பேசுகிறேன், நியூசிலாந்தில் இருந்து பேசுகிறேன் என்று கதை விட்டால் நம்பவே வேண்டாம். எதையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்து தகவல்களின் உண்மை தன்மையை அறியாமல் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று நம்பி பேசினால், மொத்தமாக ஏமாந்து போகவே வாய்ப்பு உள்ளது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications