கன்னியாகுமரிக்கு குட்நியூஸ்.. திருவனந்தபுரம்- நாகர்கோவில் தடத்தில் 3-வது ரயில் பாதை.. மாஸ்டர் பிளான்
கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 86 கி.மீ. நீளத்திற்கு ரயில் பாதை உள்ளது. இதில் 57 கி.மீ. தமிழகத்திலும், 29 கி.மீ. கேரளாவிலும் இருக்கிறது. இந்த பாதையில் தற்போது கன்னியாகுமரி- நாகர்கோவில் டவுன் வரை உள்ள பகுதிகள் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் பணிகள் நடக்கிறது.இந்நிலையில் சரக்கு ரயில்கள் வந்து செல்ல திருவனந்தபுரம்- நாகர்கோவில் தடத்தில் 3-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் தொடங்கியது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் ரயில் வழித்தட பணிகள் எந்த அளவிற்கு விறுவிறுப்பாக நடக்கிறதோ, அதேபோல் கேராளவின் தலைநகரான திருவனந்தபுரத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பணிகள் நடக்கிறது. நாகர்கோவிலில் இருந்து கூப்பிடும் தூரத்தில் தான் திருவனந்தபுரம் உள்ளது. தற்போதைய நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 86 கி.மீ. நீளத்திற்கு ரயில் பாதை உள்ளது. இதில் இதில் 57 கி.மீ. தமிழகத்திலும், 29 கி.மீ. கேரளாவிலும் இருக்கிறது. இந்த பாதையில் தற்போது கன்னியாகுமரி- நாகர்கோவில் டவுன் வரை உள்ள பகுதிகள் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குழித்துறை பாறசாலை
அதேநேரம் நாகர்கோவில்- இரணியல் வரை இருவழிபாதையாக மாற்றும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் திருவனந்தபுரம்- திருவனந்தபுரம் தெற்கு வரை இருவழிப்பாதை பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றது. இடையில் உள்ள குழித்துறை மற்றும் பாறசாலை ரெயில் நிலையங்களுக்கு இடையே பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3வது ரயில் பாதை
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் திருவனந்தபுரம்- நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ. தூரத்தில் 3-வது இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இந்த ஆய்வு இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டெண்டர் விடப்படும்
டெண்டரை எடுக்கும் தனியார் நிறுவனம் சார்பில் மூன்றாவது பாதை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வுகள் தெற்கு ரயில்வேக்கு சமர்ப்பிக்கப்பட்ட தெற்கு ரெயில்வே சார்பில் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சர்வேயில் போக்குவரத்து சர்வே, தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வை மேம்படுத்துதல், முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தல், ரேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்தல் ஆகிய அம்சங்கள் உட்படுத்தி இருக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
வருவாய் கிடைக்குமா
ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும்? எவ்வளவு ரேட் ஆப் ரிட்டன் கிடைக்கும்? எந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்? என்று அனைத்து வகையான தகவல்களும் இந்த அறிக்கையில் இடம் பெறும். இந்த அறிக்கையை ஆய்வு செய்யும் ரயில்வே வாரியம், வருமானம் வரக்கூடிய வகையில் இருந்தால், ஒப்புதல் அளித்து பின்னர் திட்ட மதிப்பீடு, மேலாண்மை பிரிவு ஒப்புதல் மற்றும் பிரதமர் தலைமையில் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை குழு இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கும்.அதன்பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.
விழிஞ்ஞம் துறைமுகம்
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் துறைமுகம் திறக்கப்பட்டதால் கன்னியாகுமரி வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரயில் பாதைகளை அமைக்க கேரளா ஆர்வம் காட்டி வருகிறது. ஏனெனில் கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் என்பது இல்லை.. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள்
அதேபோல் திருவனந்தபுரம்- நாகர்கோவில் பாதையில் அதிக ரயில்கள் வருகின்றன. எனவே சரக்கு ரயில்கள் வந்தால் தாங்காது. எனவே கூடுதல் பாதை அவசியம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த 3-வது பாதையில் திருவனந்தபுரம் அடுத்த நேமம், பாலராமபுரம், நெய்யாற்றின்கரை, தனுவச்சபுரம், அமரவிளை, பாறசாலை, குழித்துறை, பள்ளியாடி, இரணியல், ஆளூர், நாகர்கோவில் டவுன், நாகர்கோவில் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
567 ஹெக்டேர் நிலம் தேவை
திருவனந்தபுரம்- நாகர்கோவில் 3-வது ரயில் பாதை திட்டத்துக்கு மொத்தம் 567 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என்றும் பெரிய ஆற்று பாலங்கள்-3 கட்ட வேண்டியதிருக்கும் என்றும், பெரிய பாலங்கள்-16, சிறிய பாலங்கள்-405, மேம்பாலங்கள்-29, கீழ் பாலங்கள்-12, பெரிய குகைகள்-2, அதி கூர்மையான வளைவுகள்-4 ஆகியவை வரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆள் உள்ள ரயில்வே கிராசிங் கேட்-39, வாகனம் செல்லும் மேம்பாலங்கள்-29, பயணிகள் செல்லும் மேம்பாலங்கள்-11, தண்ணீர் செல்லும் மேம்பாலங்கள்-15 வரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications