ஷாரோன் கொலை வழக்கு: பச்சை நிற வாந்தி! டாக்டர் சொன்ன பரபரப்பு தகவல்.. போலீஸுக்கு கிடைத்த முதல் துப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இளைஞருக்கு விஷம் கொடுத்ததால்தான் வயிறு வலி ஏற்பட்டது என்பது மருத்துவரின் அறிக்கை மூலம் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது.

களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு கிரீஷ்மாவின் வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அந்த மாப்பிள்ளை ஷாரோனை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர் என்பதாலும் பணக்காரர் என்பதாலும் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என கிரீஷ்மா தனது காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

வீட்டில் சொல்வது போல் அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டால் நல்ல வசதியாக வாழலாம் என நினைத்த கிரீஷ்மா தனது அந்தரங்க புகைப்படங்கள், ஊர் சுற்றிய புகைப்படங்கள் எல்லாம் ஷாரோனிடம் உள்ளதே, இதனால் நாளை நம் திருமண வாழ்க்கையில் புயல் வீசினால் என்ன செய்வது என யோசித்தார்.

காதலன் ஷாரோன்

காதலன் ஷாரோன்

இதனால் காதலன் ஷாரோனுடன் சண்டையிட்டு கொள்ளாமல் நைசாக கழன்று கொள்ள நினைத்தார். இதனால் ஷாரோனிடம் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு எனது வீட்டில் என் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டினார்கள். அவரிடம் திருமணம் குறித்து கேட்ட போது எனக்கு முதல் திருமணம் தங்காது என்றும் நவம்பரில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுவார் என்றும் தெரிவித்தனராம்.

மனசு சரியில்லை

மனசு சரியில்லை

இதை கேட்டதிலிருந்தே எனக்கு மனசு சரியில்லை. என்னை காதலித்ததால் நான் உன்னை இழக்க தயாராக இல்லை. நாம் இருவரும் பிரிந்து விடுவோம், நீ யாரையாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என ஷாரோனிடம் கிரீஷ்மா கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த நடிப்பை நம்பிய ஷாரோன், அதெல்லாம் மூடநம்பிக்கை, இந்த காலத்தில் போய் ஜோசியம், ஜாதகம்னு!... என கூறி கிரீஷ்மாவை சமாதானம் செய்துள்ளார்.

சமாதானம்

சமாதானம்

"நாம் அவனை சமாதானம் செய்து பிரிந்து விடலாம் என நினைத்தால் நம்மை சமாதானம் செய்கிறானே" என்ற ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் கிரீஷ்மா. அங்கு தனது பெற்றோரிடம் அவர்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை தனக்கு பிடித்திருப்பதாகவும் ஆனால் ஷாரோனால் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கசாயத்தில் பூச்சி மருந்து

கசாயத்தில் பூச்சி மருந்து

இதன் பின்னர்தான் ஷாரோனை கொலை செய்ய கிரீஷ்மா திட்டமிட்டுள்ளார். ஒரு நாள் வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு பூச்சி மருந்து கலந்த கசாயத்தையும் குளிர்பானத்தையும் கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டவுடன் ஷாரோனுக்கு வயிறு வலிக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் உடலில் உபாதைகள் அதிகரிக்க தொடங்கியதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கிரீஷ்மா விஷ(ய)த்தை மூடி மறைத்த காதலன்

கிரீஷ்மா விஷ(ய)த்தை மூடி மறைத்த காதலன்

ஆனால் கடைசி வரை ஷாரோன் தான் கிரீஷ்மா வீட்டில் குடித்த கசாயம் குறித்தும் கூல்டிரிங்க்ஸ் குறித்தும் சொல்லவே இல்லையாம். இவரது உடலை சோதனை செய்த மருத்துவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மருத்துவர் கூறுகையில், ஷாரோன் பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தார். பொதுவாக வாந்தியோ சிறுநீரோ ஒருவருக்கு அடர்ந்த நிறத்தில் (dark)மாறினால் அவர் ஏதோ விஷத்தை உட்கொண்டுள்ளார் என்பது அர்த்தம். இப்படி விஷத்தை உட்கொண்டிருந்தால்தான் கல்லீரலோ சிறுநீரகமோ பாதித்து வாந்தியும் சிறுநீரும் அந்த நிறத்தில் வரும் என தெரிவித்தாராம்.

டாக்டர் வாக்குமூலம்

டாக்டர் வாக்குமூலம்

இந்த மருத்துவரின் வாக்குமூலம் ஷாரோன் இறப்புக்கு முக்கிய ஆதாரத்தை திரட்டி கொடுத்தது. டாக்டரின் வாக்குமூலத்தின் படி ஷாரோனுக்கு யாரோ விஷம் கொடுத்துள்ளனர் என்பதை போலீஸார் புரிந்து கொண்டு குற்றவாளியை தேடினர். அப்போதுதான் காதலி கிரீஷ்மா ஷாரோனுக்கு கசாயத்தை கொடுத்ததாக தனது மகனின் நண்பன் சொன்னதாக ஷாரோனின் பெற்றோர் போலீஸிடம் புகார் அளித்தனர்.

போலீஸ் கிடுக்கிப்பிடி

போலீஸ் கிடுக்கிப்பிடி

இதை வைத்துதான் அப்படியென்றால் கிரீஷ்மா, கசாயத்தில் கபிக் எனும் விஷத்தை கலந்து ஷாரோனுக்கு கொடுத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து கபிக் விஷ பாட்டிலை போலீஸார் கைப்பற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+