திருடன் போல் திடீரென வந்த கள்ளக்கடல்.. 2 பெண் டாக்டர்களை காப்பாற்றிய சென்னை சுற்றுலா பயணிகள் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் லெமூர் கடல் பகுதியில் திடீரென தோன்றியகள்ளக்கடல்’ காரணமாக ராட்சத அலையில் சிக்கிய ஐந்து பயிற்சி டாக்டர்கள் பலியான நிலையில், 2 மாணவிகளை துரிதமாக செயல்பட்டு சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காப்பாற்றி உள்ளனர் சென்னை சுற்றுலா பயணிகள்.. லெமூர் கடற்கரையில் நேற்று என்ன நடந்தது? கள்ளக்கடல் ஏற்படுத்திய தாக்கத்தை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மருத்துவம் முடித்து திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கிறார். முத்துக்குமாரின் அண்ணனின் திருமணம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. இதற்காக முத்துக்குமாருடன் பயிற்சி மருத்துவர்களாக உள்ள 17 பேர் நாகர்கோவில் வந்துள்ளனர்.

Kallakadal came suddenly like a thief Chennai tourists who saved 2 female doctors interviewed

நேற்று முன்தினம் திருமணம் முடிந்த நிலையில் பயிற்சி மருத்துவர்கள் 12 பேர் இன்று காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் லெமூர் கடலில் கால் நனைக்க சென்றுள்ளார்கள். ஆனால் ஏற்கனவே கடற்கரை பகுதியில் கள்ளக்கடல் தொடர்பாக ரெட் அலார் விடுக்கப்பட்டிருந்து. திடீரென ராட்சத அலைகள் வந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கரையில் இருப்பவர்களை உள்ளே இழுத்து மூழ்கடித்துவிடும். படகுகளையும் கடுமையாக சேதத்திற்கு உள்ளாக்கிவிடும்.

இந்த கள்ளக்கடல் எச்சரிக்கைக்கு நடுவே லெமூர் பீச்சிற்கு பயிற்சி மருத்துவர்களான தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த பிரீத்தி பிரியங்கா(23), மதுரையைச் சேர்ந்த சரண்யா(24), கரூரைச் சேர்ந்த நேசி(24), நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த சர்வ தக்‌ஷித்(23), திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பிரவீன் சேம்(23), நெய்வேலியைச் சேர்ந்த காயத்திரி(25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ்(24), தஞ்சாவூரைச் சேர்ந்த சாருகவி(23) ஆகிய 8 பேரும் கடலில் இறங்கி உள்ளனர்.

அப்போது எழுந்த பெரிய அலையில் 7 பயிற்சி டாக்டர்கள் ராட்சத அலையில் சிக்கினர். அப்போது அங்கு ஏற்கனவே சுற்றுலாவுக்காக வந்து கடற்கரையில் இருந்த சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜா, பரத், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சக பயிற்சி டாக்டர்களுடன் சேர்ந்து காப்பாற்ற முயன்றார்கள். துரிதமாக செயல்பட்டதால் 2 பயிற்சி பெண் டாக்டர்களை காப்பாற்றினர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட சென்னை சுற்றுலா பயணிகள் கூறுகையில், "நாங்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தோம். பல இடங்களில் சுற்றி பார்த்த நாங்கள் லெமூர் கடற்கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து ரசித்தபடி இருந்தோம். இந்த கடல் ஆபத்தானது என்று நாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தோம். இதனால் கடற்கரையிலேயே அமர்ந்து கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது நிறைய ஆண்களும், பெண்களும் கடற்கரைக்கு வந்தனர். ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டே வந்த அவர்கள் ஒன்றாக நின்று கடலில் கால் நனைத்தார்கள். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென ராட்சத அலை வந்து அவர்களை கடலுக்குள் இழுத்தது. இதை பார்த்த நாங்கள் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றோம். அதில் 2 பெண்களை மட்டும் இழுத்து வெளியே கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் மற்றவர்களை மீட்க முடியவில்லை. அவர்களை கடல் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. இதனால் உடனே தீயணைப்பு நிலையத்துக்கும், கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவித்தோம். நாங்கள் தகவல் கூறி 45 நிமிடங்களுக்கு பிறகு தான் அவர்கள் வந்தார்கள்' என்றார்கள். லெமூர் கடற்கரை பகுதியில் நீச்சல் தெரிந்த வீரர்கள் ஒருவேளை பாதுகாப்பில் இருந்திருந்தாலோ அல்லது கள்ளக்கடல் குறித்து ரெட் அலார்ட் காரணமாக கடற்கரைக்கு யாரையும் அனுமதிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் யாருமே உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

கள்ளக்கடல் விபரீதம்: தமிழக மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் ஏற்படும் நாட்களில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படும்
எந்த முன் அறிவிப்பும் இன்றி திருடனை போல கடல் அலை திடீரென சீற்றத்துடன் வரும் என்பதைத்தான் கள்ளக்கடல் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவித்திருந்தது. கள்ளக்கடல் காரணமாகவே லெலமூர் கடலில் 5 பேர் மற்றும் குமரி மாவட்டத்தில் 8 பேர் இறந்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+