Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பாட்டுக்கே போய்.. பாஜகவை கடுப்பாக்கியது யார் பாருங்க.. கால் நகத்தில் அழுக்கா? கொதிப்பில் கமலாலயம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திமுக அமைச்சர் தந்த காரசாரமான பதிலடியால், தமிழக பாஜக கொந்தளித்து போயுள்ளது.. என்ன நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத்தில், 'என் மண், என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொள்ள துவங்கியபோதே, உள்ளூர் அமைச்சரான மனோ தங்கராஜை டார்கெட் செய்து பேசிவருகிறார்.

Kanniyakumari and BJP should learn to respect democratic government, says minister Mano Thangaraj

குறிப்பாக, குமரி மாவட்டம் வழியாக கனிம வளம் கடத்தப்படுவதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ்தான் காரணம் என்ற ரீதியில் கருத்துகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை...

பாதயாத்திரை: அதனால்தான் பாதயாத்திரையில் தங்கராஜுக்கு, "மலை முழுங்கி மனோ தங்கராஜ்" என்ற பட்டப்பெயரையும் அண்ணாமலை சூட்டியிருந்தார். தொடர்ந்து டார்கெட் செய்து அண்ணாமலை பேச்சால் கொந்தளித்து போயிருக்கும் மனோதங்கராஜ், தற்போது காட்டமான பதிலடியை தந்துள்ளார்.

நேற்றைய தினம், நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் நடத்தப்பட்ட போராட்டத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

பேட்டி: அப்போது, செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜகவை கடுமையாக சாடினார்.. "திமுக தொண்டனின் கால் நகத்தில் இருக்கும் அழுக்கிற்கு கூட தகுதியற்ற அண்ணாமலை எங்கள் தலைவரை பற்றி எப்படி பேச முடியும்? 2 கி.மீ கூட நடக்க தகுதியற்ற அண்ணாமலை, இந்த அநாகரீக பேச்சை அவர் நிறுத்த வேண்டும்.

திமுகவினருக்கு இதை விட அநாகரீகமாக பேச தெரியும்.. ஆனால் நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, வாயை மூடிக்கொண்டு பேசிவருகிறோம். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கனிமவளம் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.. குவாரிகள் இருப்பதை 10 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்தவர் யார்? என்பதை முதலில் கேளுங்கள்.

ஜனநாயகம்: பாராளுமன்ற நடைமுறைக்கு எதிரான வார்த்தைகளால், நான் ஒன்றும் பிரதமரை பேசவில்லை.. அதேசமயம், சனாதனம், செங்கோல் குறித்து எனக்கு கருத்து சொல்வதற்கு உரிமையிருக்கிறது..

Kanniyakumari and BJP should learn to respect democratic government, says minister Mano Thangaraj

இந்த நாடு, ஜனநாயக நாடாக, குடியரசு நாடாக அமைவதற்கு முன்னாள் ஆட்சியாளர்களின் அடையாம்தான் செங்கோல்... மக்களாட்சி வந்தபிறகு, நாட்டின் ஆட்சி அடையாளம் என்பது அரசியல் சாசனம். அந்த கருத்தை நான் சொல்வதற்கு கூட எனக்கு உரிமை இல்லை என்று அண்ணாமலை நினைத்தால், அது அவரது காரியம்.

சீற்றம்: ஆட்கள் இல்லாத கட்சியான பாஜகவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.. பாஜக கதைக்கு ஆகாத கட்சியாகும்.. ஆளுநர் அவரது எல்லையை புரிந்துகொள்ள வேண்டும். நடைப்பயணத்தை கூட ஒழுங்காக நடத்த தெரியாத கட்சிக்கு பதில் சொல்ல வேண்டி தேவை எங்களுக்கு இல்லை என்று சீறியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+