"ஷர்மிளாவும் நானும்".. ஆபாச படங்களை காதலியின் அம்மாவுக்கு அனுப்பி வைத்த இளைஞர்.. அதிரடி கைது

காதலியின் போட்டோவை அனுப்பி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: "ஷர்மிளாவுடன் தனிமையில் இருந்தேன்.. நிறைய வீடியோ, போட்டோக்களையும் எடுத்து கொண்டேன்.. இப்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்ய இருப்பதாக கேள்விப்படவும், அந்த வீடியோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன்" என்று இளைஞர் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ளது ஒசரவிளை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சகிதா.. 45 வயதாகிறது.. கணவரை இழந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள்தான் ஷர்மிளா.. 26 வயதாகிறது.. குவைத் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்க்கிறார்.. இங்கிருந்து குவைத் செல்வதற்கு முன்பு ஷர்மிளா மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார்.. பல இடங்களுக்கு இருவரும் சுற்றி திரிந்துள்ளனர்.. ஃபேஸ்புக் காதல் இது!

மிரட்டல்

மிரட்டல்

இருவரும் கல்யாணம் செய்ய பிளான் இருந்த நேரத்தில்தான், கடந்த வருடம் ஜுன் மாதம் குவைத் நாட்டில் வேலை கிடைக்கவும் ஷர்மிளா சென்றுவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தனேஷ் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பணம் தராவிட்டால், தனிமையிலிருந்தபோது எடுத்து கொண்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவேற்றிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

கைது விவகாரம்

கைது விவகாரம்

இதையடுத்து ஷர்மிளாவின் தாயார் சகிதா அஞ்சுகிராமம் போலீஸ் ஸ்டேஷனில் தனேஷ் மீது புகார் தரவும், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது அளித்த வாக்குமூலத்தில், "நானும் ஷர்மிளாவும் நெருங்கி பழகினோம்.. எங்கள் விவகாரம் ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும்.. அவள் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன்.

ஷர்மிளா

ஷர்மிளா

இப்போது ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள்.. அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போவதாகவும் கேள்விப்பட்டேன். அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, போட்டோக்களை மார்ப் செய்து ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன்.. என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன்.

கைது

கைது

அதை ஷர்மிளா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை... அதனால்தான் அந்த போட்டோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன்.. இப்போது என் மீது புகார் அளித்துள்ளனர்" என்றார். அஞ்சுகிராமம் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+