கன்னியாகுமரி கிட்ட விபச்சாரம்.. ரூ.2 ஆயிரத்தில் உல்லாசம்.. சலூனில் இவங்கல்லாம் யாரு? ஆடிப்போன போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில், மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை தற்போது மேற்கொண்டு வரும்நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மாவட்ட காவல்துறையையே கதிகலங்க வைத்துள்ளது. எனன நடந்தது?
தமிழ்நாட்டில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் பல இயங்கி வருகின்றன.. இந்த ஸ்பாக்களில், பெண்களை பணியில் அமர்த்தி, விபச்சாரங்கள் நடப்பதும் அதிகரித்து வருகின்றன.

குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற சூழலுக்கு ஆளாகிவிடும் இளம்பெண்களை, அதிக சம்பளம் தருவதாக கூறி, இதுபோன்ற ஸ்பாசென்டர்களில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.. இதையடுத்துதான், தமிழக போலீசார், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் அடிக்கடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர்கள் விதிமுறை மீறி இயங்குவதாக வந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார்கள் வந்தன.
கன்னியாகுமரியில் விபச்சாரம்
இதையடுத்து, கடந்த வாரம் கன்னியாகுமரியில் முறையான அனுமதியின்றி இயங்கிய 30க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை தனிப்படை போலீசார் சீல் வைத்தனர்.. அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.. இறுதியில், வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
அந்தவகையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம் உட்பட மாவட்டம் முழுவதும் பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம்..
நாகர்கோவில் மசாஜ் சென்டர்கள்
இப்படிப்பட்ட சூழலில், நாகர்கோவில் நகரிலும் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.. எனவே, புகார் வந்த பகுதிகளிலும் சோதனை நடத்தி, முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த மசாஜ் சென்டர்களை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். மேலும், அந்த மசாஜ் சென்டர்களில் பணியாற்றிய பெண்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.. பொதுவாக, மசாஜ் சென்டர்களில் பணியாற்ற கூடியவர்கள் முறைப்படி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இதற்கான பயிற்சியை முடித்து, சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதில் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், போலியாக மசாஜ் பயிற்சி முடித்ததாக சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
மூடப்பட்ட கல்வி நிறுவனம்
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில், மசாஜ் பட்டய பயிற்சி முடித்ததாக 2 பெண்கள் போலியான சான்றிதழ்களை வைத்திருப்பதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்..
எனவே, சான்றிதழ் தந்த அந்த கல்வி நிறுவனம் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கினர்.. அப்போதுதான், அந்த கல்வி நிறுவனம மூடப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டதாம். அப்படியிருந்தும், 2020 - 21ம் ஆண்டில் இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பெண்கள் வெறும் 5ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்களாம்.
இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, 3 பெண்கள், 2 ஆண்களை போலீசார் கைது செய்தனர். அத்துடன், மசாஜ் சென்டர்களில் இருந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்..
இதற்கெனவே தனி புரோக்கர்கள்
இந்த பெண்கள் 3 பேருமே, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.. வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வருவதற்காகவே புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இந்த புரோக்கர்கள் தான் போலி சான்றிதழ்கள் தயாரித்து தந்திருக்கிறார்கள்.. எனவே, புரோக்கர்களை தேடும் பணி துரிதமாகியிருக்கிறது.
வெளிமாவட்ட பெண்களை இப்படி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர்.. ந்த மசாஜ் சென்டர்களில் உள்ள பெண்கள், 15 நாட்களுக்கு ஒருமுறைதான், விடுமுறையில் ஊருக்கு செல்வார்களாம்..
ரூ.2 ஆயிரத்திற்கு உல்லாசம்
இங்கு கஸ்டமர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.. பிறகு, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க, ரூ.1000ம் வசூலிக்கப்படுகிறது.. அந்தவகையில், ஒரு நபரிடம் இருந்து ரூ.2000 வசூலித்து கொண்டு, பிறகு தேவைக்கேற்ப கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுமாம்.
5ம் வகுப்பு மட்டுமே படித்த பெண்களுக்கு போலி சான்றிதழ்களை தந்து, அதுவும் 15 வருடத்துக்கு முன்பு மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் சான்றிதழை தந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications