வாந்தியா வருதுடா.. காதலனுக்கு ஜூஸில் விஷம் தந்து கொன்ற வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி! நாளை தண்டனை
கன்னியாகுமரி: ஷாரோன் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கான தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது.
கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் 23 வயதான ஷாரோன் ராஜ் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார்... இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற 22 வயது பெண்ணை காதலித்து வந்தார்... கிரீஷ்மா கன்னியாகுமரியிலுள்ள கல்லூரியில் எம்ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஷாரோன்: இந்த நிலையில், ஷாரோன்ராஜ் தன்னுடைய நண்பர் ஒருவருடன் காதலியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. அப்போது, நண்பர் வாசலில் காத்திருக்க, ஷாரோன் மட்டும், கிரீஷ்மா வீட்டுக்குள் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் வெளியே வந்துவிட்டார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஷாரோன்ராஜூக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டுள்ளது.. காதலி தனக்கு கசாயமும், ஜூஸும் தந்ததாக நண்பரிடம் சொல்லவும், உடனடியாக பாறசாலை அரசு மருத்துவமனையில், ஷாரோனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார் அவரது நண்பர். ஆனால், ஷாரோனின் நிலைமை படுமோசமானது.. இதனால், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஷாரோன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலி: இதையடுத்து, ஷாரோனின் அப்பா ஜெயராஜன், தன்னுடைய மகனின் காதலியும், அவரது பெற்றோரும் சேர்ந்து ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று பாறசாலை போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, தனிப்படையும் வைத்து விசாரணையும் ஆரம்பமானது.
அப்போது, கிரீஷ்மா, அவரது பெற்றோர் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் எஸ்பி ஆபீசில் விசாரணைக்காக ஆஜராகினர்... இது தொடர்பான விசாரணையில் கிரீஷ்மா பல்வேறு தகவல்களை கூறி போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தார்..
ராணுவ வீரர்: அதாவது, ஷாரோனை கிரீஷ்மா காதலித்து வந்தபோது, ராணுவ வீரர் ஒருவரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். அத்துடன கிரீஷ்மாவுக்கு அந்த ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தமும் நடத்தியிருக்கிறார்கள்.. இதைக்கேள்விப்பட்ட ஷாரோன், கிரீஷ்மாவிடம் வந்து, தன்னை ஏமாற்றி விட்டாயே கதறி அழுதுள்ளார்...

குடும்ப சூழ்நிலையால், விருப்பமில்லாமல் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக கிரீஷ்மா சொல்லி உள்ளார். எனினும், கிரீஷ்மா தன்னைவிட்டு பிரிந்துவிடுவாரோ என்று நினைத்து ஷாரோன் அழுதபடியே இருந்துள்ளார்.
கொலை முயற்சி: இதற்குநடுவில், தன்னுடைய திருமணத்திற்கு ஷாரோன் இடைஞ்சலாக இருக்கலாம் என்று நினைத்த கிரீஷ்மா, அவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.. அதன்படி, சம்பவத்தன்று தன்னுடைய வீட்டுக்கு ஷாரோனை வரவழைத்து, ஜூஸில் விஷம் கலந்து தந்துள்ளார்.. அதாவது, ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை, ஜூஸில் கலந்து ஷாரோனுக்கு தந்துள்ளார்..
இது அத்தனையும் விசாரணையில் அம்பலமானதையடுத்து, கிரீஷ்மாவும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது, தாய்மாமா உள்ளிட்டோரும் கைதாகினர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவந்த நிலையில்தான், கிரீஷ்மா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என்று நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
வாக்குமூலம்: இந்த தீர்ப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. ஷாரோன் கொலை சம்பவமானது, மிகப்பெரிய பரபரப்பை தமிழகம் முழுவதும் அப்போது ஏற்படுத்தியிருந்தது.. இது தொடர்பான விசாரணைகளும், கிரீஷ்மாவின் வாக்குமூலங்களும், வழக்கு தொடர்பான தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை விவரங்களும், தமிழக-கேரள மக்களை நிலைகுலைய வைத்துவிட்டன.
- ஒன்றுக்கு பத்து முறை ஷரோனைக் கொல்ல முயன்று கடைசியாகத்தான் அதில் வென்றிருக்கிறார் கிரீஷ்மா. மிக மிக தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அந்த அப்பாவியை கொலை செய்திருக்கிறார்.. கடைசியாக கசாயம் என்ற பெயரில் அவர் கொடுத்த விஷத்தை சாப்பிட்ட ஷரோனுக்கு வாந்தி வந்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் கிரீஷ்மாவிடம், வாந்தியா வருது என்றாராம். அதற்கு கிரீஷ்மா, "அதெல்லாம் ஒன்னுமில்லை, பேசாம தூங்கு சரியாகிடும்" என்றாராம்.
- ஜூஸ் சேலஞ்ச் நடத்தி அதில் "டோலோ" மாத்திரைகள் கலந்து தந்து, ஏற்கனவே ஷாரோனை கொலை செய்ய முயன்றவர்தான் இந்த இளம்பெண்..
- கிரீஷ்மா, ஷாரோனை கொலை செய்வது, அவரது அம்மா சிந்துவுக்கு தெரியுமாம்.. அதுமட்டுமல்ல, கிரீஷ்மாவுக்கு பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்ததே அவரது தாய்மாமா நிர்மல் குமார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
- கொலை செய்வதற்கு முதலநாள், உடலுறவுக்கு அழைக்க ஷரோனை பலமுறை தொடர்பு கொண்டாராம் கிரீஷ்மா. இதுவும் குற்றப்பத்திரிகையில் பதிவாகியிருந்தது.
- ஷாரோன் மருத்துவமனையில் படும் அவதியை பார்த்த உறவினர்கள், க்ரீஷ்மா விஷம் வைத்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்போதுகூட, தன்னுடைய உயிர்போகும் தருவாயிலும், காதலியை காட்டிக்கொடுக்க மறுத்த ஷாரோனின் காதல், பலரையும் அப்போது விக்கித்து போக வைத்துவிட்டது.. உயிருக்கு உயிராக நேசித்தவனை, துடிக்க துடிக்க கொலை செய்த இந்த 22 வயது பெண்ணுக்கு நாளைக்கு நீதிமன்றம் என்ன தண்டனை தரப்போகிறதோ தெரியவில்லை..!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications