கன்னியாகுமரிக்கு போன குட்நியூஸ்.. பண்டிகை நெருங்கிடுச்சு.. சென்னை தாம்பரத்திலிருந்து ஸ்பெஷல் ரயில்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, முன்கூட்டியே பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல தயாராகிவிட்டனர்.. இவர்கள் அனைவரும் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகே, தங்கள் சொந்த ஊர் திரும்பக்கூடும் என தெரிகிறது.

kanniyakumari chennai tambaram

சிறப்பு ரயில்கள்:

இதையொட்டி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், "ரயில் எண் 07361 கொண்ட பெலகாவி - தூத்துக்குடி சிறப்பு ரயில் டிசம்பர் 20 அன்று காலை 9.55 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இது அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.

அதேபோல, ரயில் எண் 07362 கொண்ட தூத்துக்குடி - பெங்களூரு சிறப்பு ரயில் டிசம்பர் 21 அன்று பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இது அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது.

ரிசர்வேஷன்:

இந்த இரண்டு ரயில்களுக்கும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏசி டயர் 2, டூ ஏசி டயர் 3, 9 ஸ்லீப்பர் கிளாஸ், 4 பொதுப் பெட்டிகள், 2 செகண்ட் கிளாஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ரயில் எண் 12636 கொண்ட மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 11, 2025 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். சரியாக சொல்ல வேண்டுமெனில் நண்பகல் 12.23 முதல் 12.25 வரை நிற்கும். இது இருமுடி அல்லது தைப்பூசம் பண்டிகையை ஒட்டி பயணிப்பவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதேபோல் தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

கன்னியாகுமரி:

அந்தவகையில், தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி இடையே வரும் 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அதே நாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மிகுந்த மகிழ்ச்சி:

மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் புறப்படும். இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பானது பயணிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்த வருகிது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+