முளைச்சு 3 இலை விடலை.. ஓயாமல் ஆபாச சீன்.. தலையிலேயே அடித்து கொண்டு அழுத தாய்.. ஆடிப்போன கன்னியாகுமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நடந்த சம்பவம், பொதுமக்கள் உள்ளிட்ட பெற்றோர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒருவர் கைதாகி உள்ளார்.. போலீசாரும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

நேற்றுமுன்தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. சூனாம்பேடு அருகே உள்ள ஒத்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடுக்கலூர் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

kanniyakumari cellphone

அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர், பிளஸ் 1 படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, ஸ்கூலுக்கு சென்ற மாணவியின் கையை பிடித்து இழுத்துள்ளார் அந்த மாணவர்.. இதனால், மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் முறையிடவும், பெற்றோர் உடனடியாக மேல்மருவத்தூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவரை கைது செய்து, செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சிறையில் அடைத்தனர்... ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்த மாணவர், ஒரு வருடத்துக்கு முன்பு, கூட்டு பாலியல் புகாரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவராம். இப்போது மீண்டும் அதே மாணவரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.

வெள்ளிச்சந்தை: இதேபோன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது நடந்து, பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.. குளச்சல் அருகே வெள்ளிச்சந்தை என்ற பகுதி உள்ளது.. இந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில், 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்.. திருமணமாகிவிட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.

இவருக்கு 13 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ள நிலையில், தன்னுடைய அம்மா வீட்டில் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்த பெண்.. குடும்ப சூழலுக்காக, நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையிலும் வேலை பார்த்து வருகிறார்... காலையில் வேலைக்கு கிளம்பினால் மாலை வீடு திரும்ப நேரமாகிவிடுமாம்.

என்ன காரணம்: இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம், 5 வயது மகள் அழுது கொண்டேயிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகளிடம் கேட்டதற்கு, அந்த குழந்தை எந்த பதிலும் சொல்லவில்லையாம்.. ஆனால், 5 வயது குழந்தையின் தொடர் அழுகையை கண்டு பயந்துபோன அந்த பெண், அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்..

அப்போதுதான், தன்னுடைய 13 வயது மகன், 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், தனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அந்த குழந்தையும், தினமும் அழுதபடி இருந்திருப்பதும் தெரியவந்தது.

இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார்... உடனே போலீசாரும், 13 வயது அண்ணனை போக்சோவில் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

ஆபாச காட்சிகள்: இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "சிறுவனிடம் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. இதனால் சோஷியல் மீடியாவில் ஆபாச காட்சிகள், ஆபாச படங்களை பார்த்து, இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.. பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்" என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+