Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் கேட்டு போன காதலன்.. காதலி வீட்டில் அவமானம்.. திடீரென பெட்ரோலை ஊற்றி.. கலங்கிய கன்னியாகுமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பல நாட்களாக காதலித்து வந்த பெண்ணை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டதால், காதலி வீட்டு முன் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவர் கேரளாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் முகேஷ்க்கு 25 வயது ஆகிறது. டிகிரி முடித்துள்ள முகேஷ், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

Kanyakumari : Boyfriend set himself on fire in front of his girlfriends house near Nithravilai

முகேஷ்க்கு நித்திரவிளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த மாணவி நாகர்கோவில் பகுதியில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளார்கள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலிக்க தொடங்கிய முகேஷ், சென்னைக்கு சென்ற பிறகு செல்போனில் காதலை வளர்த்து வந்துள்ளார். காதலித்த பெண்ணையே மணக்க விரும்பிய முகேஷ்க்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் காதலியின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தையிடம் முகேஷ் முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் அவமதித்து அனுப்பினாராம். மேலும் அதை காதலி கண்டு கொள்ளவில்லையாம்.

இதனால் விரக்தி அடைந்த முகேஷ் காதலி வீட்டு முன்பு தீக்குளிக்க முடிவு செய்தார். நேற்று முன்தினம் ஒரு கேனில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு காதலி வசிக்கும் நித்திரவிளை பகுதிக்கு போனார். அங்கு காதலி வீட்டு முன்பு நின்றபடி காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென பெட்ரோலை தன்னுடைய உடலில் ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி முகேஷ் அலறி துடித்தார். தீயை அணைக்கும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர். எனினும் உடல் முழுமையாக கருகியது. ஆபத்தான நிலையில் முகேஷ் குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+