கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் காதல்.. மாணவருடன் சேர்ந்து கல்லூரி மாணவி தந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அருகே ஒரு மலைக் கிராமத்தை சேர்ந்த மாணவி குலசேகரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரி விடுதிக்கு சென்ற மாணவி, விடுதி காப்பாளரிடம் தனக்கு உடல்நலம் சரியில்லையென கூறி விடுதியில் இருந்து மாயம் ஆனவர்.. திரும்ப வரவே இல்லை.. கள்ளக்குறிச்சி மாணவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி மாயமானது தெரியவந்துள்ளது.

இன்றைக்கு வாழ்க்கையை பற்றி சரியான புரிதல் இல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு 2கே கிட்ஸ் காதலிக்கிறார்கள். காதலிப்பவர் யார், அவர் பின்புலம் என்ன, அவரால் வழித்துணையாக கடைசி வரை வர முடியுமா, நம்மை புரிந்து கொள்வாரா என்பதை யோசிப்பது இல்லை. சினிமாவில் வரும் காதல் காட்சிகளை உண்மை என்று நம்பி, ரவுடித்தனம் செய்வோரை காதலிப்பது அதிகமாக உள்ளது. அதேபோல் பையன்களுமே, ஒரு பெண்ணை பார்த்ததுமே பிடித்து போய் காதலிக்கிறார்கள்.

Kanyakumari College student escapes due to love blossoming at a tourist destination in Pechiparai

பார்த்ததுமே வருவது இனக்கவர்ச்சி என்றாலும், அழகாக இருக்கும் பெண் மீது திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு சுற்றுகிறார்கள். 17, 18 வயதில் உள்ள பல மாணவ மாணவிகள் காதல் என்ற மாய வலையில் விழுந்து, எதிர்காலத்தை புரிந்து கொள்வதற்குள் யாரையாவது காதலித்து ஏமாறுவது நடக்கிறது. பெண்கள் ஏமாறுவதும், ஆண்கள் போக்சோவில் உள்ளே போவதும் அதிகமாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி, கள்ளக்குறிச்சி மாணவருடன் ஓட்டம் பிடித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த வருடம் தான் மாணவி பிளஸ் 2 முடித்துள்ளார். இளம் ஜோடிகள் தங்கள் காதலை பெற்றோர்கள் பிரிப்பார்கள் என்று பயந்து ஓடிப் போய் விட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஒரு மலைக் கிராமத்தை சேர்ந்த மாணவி குலசேகரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மே 11-ந் தேதி தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரி விடுதிக்கு சென்ற மாணவி, விடுதி காப்பாளரிடம் தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறி விடுதியில் இருந்துள்ளார்.

பின்னர் மதியம் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி விடுதியை விட்டு கிளம்பி சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரிக்கு வெளியே வந்து நின்ற ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு வரவில்லையென கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

இதனால் மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வந்து மாணவியை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில், மாணவி கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபருடன் ஓடிப்போனது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மாணவி பிளஸ்-2 படித்துக் கொண்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கோதையாறு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது அந்த பகுதி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மாணவியிடம், ஒரு வாலிபர் பேச்சுக் கொடுத்து அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் அருமையாக இருப்பதாக பேசியுள்ளார். மேலும் அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவி தனது ஊரை பற்றி கேட்கிறார்களே என்று நினைத்து ஊரைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த கள்ளக்குறிச்சி இளைஞர், கன்னியாகுமரி மாணவியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதையடுத்து ஊருக்கு சென்ற இளைஞர், தொடர்ந்து அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்து நட்பை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் மாணவி, அந்த கள்ளக்குறிச்சி இளைஞரை வரவழைத்து அவருடன் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+