SIR.. வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை நாளைக்குள் தர வேண்டும்.. கன்னியாகுமரி கலெக்டர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வழங்க வேண்டும் என்று கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிக்காக அடுத்த மாதம் முதல் படிவங்கள் வழங்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SAR) என்பது, எந்த ஒரு வாக்காளரையும் நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் வழங்குவது மற்றும் கள ஆய்வு செய்யும் பணியில் 90 சதவீதத்தைக் கடந்து விட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் வீட்டிற்கே சென்று விண்ணப்பப்படிவங்களை வழங்கினார்கள். இந்த படிவங்களை நாளைக்குள் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 817 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 97.49 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய 11 லட்சத்து 92 ஆயிரத்து 514 வாக்காளர்களின் பெயர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதால் கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன.
சுனாமி பேரிடர் மற்றும் திருமணமாகி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெற அந்தந்த கிராமங்களில் உள்ள அமைப்புகளின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துரிதமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வடமாநிலங்களை சேர்ந்த எந்தவொரு வாக்காளர்களும் குமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிக்காக அடுத்த மாதம் முதல் படிவங்கள் வழங்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை மாநகராட்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications