காணாமல் போன கன்னியாகுமரி மனைவி செல்போனில் அனுப்பிய புகைப்படம்.. கனவில் கூட கணவன் நினைக்காத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான இளம்பெண் , கணவர் மட்டும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு புரிந்து சென்றுவிட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த பெண் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை செல்போனில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த கணவர் குடும்பத்தினர் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு நூறாம் வயல் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி 8 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் கருத்து வேறுபாடால் கணவரை விட்டு பிரிந்த அவர் பெற்றோருடன் அந்த பெண் வசித்து வந்தார்.

kanyakumari marriage love

இதனை தொடர்ந்து இளம்பெண், கேரள மாநிலம் வெள்ளறடையிலுள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் கேரள மாநிலம் அம்பூரி பகுதியைச் சேர்ந்த கணவரின் உறவுக்காரருடன் அவருக்கு திருமணத்தை மீறிய காதல் ஏற்பட்டது. அவர் கேரளாவில் வனத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். வனத்துறை ஊழியருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் வனத்துறை ஊழியருடன் இளம்பெண் குடும்பம் நடத்த தயாரான நிலையில், இதற்காக பெற்றோரிடம் கூட சொல்லாமல் கேரளாவிலேயே அவர் தங்கினார்.

இதனிடையே வேலைக்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டதாக அவரது தந்தை ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்த இளம்பெண், தான் வனத்துறை ஊழியரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அதன் புகைப்படத்தை கணவரின் வீட்டு குடும்பத்தினருக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்துள்ளார். அதனை அறிந்த கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெள்ளறடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அழைத்ததின் பேரில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது கணவருடன் செல்ல மாட்டேன், வனத்துறை ஊழியரை திருமணம் செய்து கொண்டேன், அவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என அந்த பெண் அடம்பிடித்தார். இது முறையற்ற செயல் அந்த பெண்ணை போலீசார் கண்டித்தனர். அப்போது கணவர் குடும்பத்தினரும் இருந்தனர். எனினும் இளம்பெண், தன்னுடைய காதலே சிறந்தது என கூறியபடி இருந்தார். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

சட்டப்படி விவாகரத்து செய்யாமல் பெண், வேறு ஒரு ஆணை இரண்டாவது திருமணம் செய்ய முடியாது என்றாலும் நடைமுறையில் பல சிக்கல் உள்ளன. இதேபோல் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ கணவர் நினைத்தாலும் நடைமுறையில் சாத்தியமாக இருப்பது இல்லை.. ஒரு பெண், கணவரை பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்து பிரிந்துவிட்டால், அந்த கணவர் சட்ட ரீதியாக என்ன முயற்சி செய்தாலும், அந்த பெண்ணாக திருந்தி வாழ்ந்தால் தான் உண்டு. மற்றப்படி நீதிமன்றங்களில் சென்று முறையிட்டாலும், காவல்துறையில் முறையிட்டாலும், தீர்வுகள் என்பதுகேள்வி குறியாகவே உள்ளது. அதேநேரம் மனைவி வேறு ஒருவருடன் விவகாரத்து செய்யாமல் சென்றுவிட்டால், கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் உறவு சிக்கல்கள், குடும்ப விவகாரம் காரணமாக, காவல்துறை இந்த விவகாரத்தை மிக மிக கவனமாகவே கையாள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+